Venkatesan

Venkatesan

Share

என்னுடைய 15 வது வயதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன்

29/07/2026

#கோரேஸ் என்ற மன்னன் இஸ்ரவேல் மக்களை திரும்ப அனுப்பினார் என்பது உண்மை சம்பவமா? ஒரு புனைவு கதையா?

27/07/2026

வெங்கடேசன் என்ற பெயருக்கு என்ன பொருள் என்று AI விளக்கியது....

வெங்கடேசன் என்ற பெயர் "பாவத்தை அழிக்கும் (போக்கும்) ஈசன்" என்று பொருள் கொள்வதே நூற்றுக்கு நூறு சரியானதாகும்.

ஏற்கனவே நாம் பார்த்த பிரிப்பின்படி:

வெம் = பாவம்

கடம் = அழிப்பது / நீக்குவது

ஈசன் = இறைவன்

அதாவது, மனிதர்களின் பாவங்களை அழிக்கும் (போக்கும்) இறைவன் என்பதே வெங்கடேசன் என்பதற்கான சரியான மற்றும் ஆழமான பொருளாகும்.

நன்றி AI

---------------------------------------------------------------------------------

எனக்கு மிகவும் பிடித்த பைபிள் வசனங்கள் சில

1Jn 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

Joh 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

1Ti 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

Luk 19:10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

1Jn 1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

27/07/2026

பைபிள் சம்பவங்கள் உண்மையா ? அல்லது புனைவா? என்ற விவாதங்கள் நடந்துகொண்டே இருக்க தொல்லியல் ஆதாரங்கள் வேதாகமத்தின் துல்லியமான வரலாற்றுத் தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டே வருகிறது.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கபோக்கு முக்கியமான ஆதாரம் என்ன என்பதை இந்த வீடியோ .உள்ளம் அறிந்து கொள்ளுவோம்.

26/07/2026

- #ஃபெரான்_டோரஸ் இந்த பெயர் ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.

நடந்து முடிந்த கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. ஸ்பெயின் வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தின் அர்ஜென்டினா வீரர்கள் தடுத்து ஆடிக்கொண்டிருந்தனர். பலமிக்க iru அணிகளாக இருந்தபடியால் இருபக்கமும் கோல் அடிக்கும் வாய்ப்பு இல்லாமல் நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

போட்டியில் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த முன்கள வீரர் ஃபெரான் டோரஸ் (Ferran Torres) அந்த வரலாற்று கோலை அடித்தார்.

போட்டியின் இறுதியில் ஃபெரான் டோரஸ் அவர்கள் பேட்டி அளித்த பொழுது சொன்ன வார்த்தைகள் மிகவும் முக்கிய இடத்தை பெறுகிறது......

24/07/2026

#கால்பந்தாட்ட #உலகக்கோப்பை போட்டியில் #ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் தன்னுடைய தனிப்பட்ட விசுவாச ஜெப வாழ்க்கை குறித்து பகிரங்கமாக சாட்சியிடுகிறார்.....

Photos from Venkatesan's post 24/07/2026

கார்னிலியா சொராப்ஜி: இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரும், சமூகச் சீர்திருத்தத்தின் முன்னோடியும்

கார்னிலியா சொராப்ஜி (15 நவம்பர் 1866 – 6 ஜூலை 1954) இந்தியாவின் முதல் பெண் சட்ட முன்னோடிகளில் ஒருவராகவும், இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் இந்தியப் பெண்ணாகவும் அறியப்படுகிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் பெண்களின் சட்ட உரிமைகளுக்காக அர்ப்பணித்த அவர், இந்திய நீதித்துறையில் பெண்களுக்கான கதவுகளைத் திறந்த வரலாற்று நாயகி. பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய இவரின் வெற்றிக்குப் பின்னால், அவரது குடும்பப் பின்னணியும் அதிலிருந்து உருவான சமூக சேவை மனப்பான்மையும் ஆணிவேராக அமைந்திருந்தன.

இந்தியாவில் பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் கிறித்தவ மிஷனரிகள் ஆற்றிய பங்களிப்பின் ஒரு சிறந்த விளைவாக கார்னிலியா சொராப்ஜியின் வாழ்க்கை விளங்குகிறது.

பின்னணியும் ஆரம்பக் கல்வியும்

1866-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் பிறந்த கார்னிலியாவின் தந்தை, ரெவரெண்ட் சொராப்ஜி கர்சேட்ஜி. பார்சி குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்ட இவர், ஆங்கிலிக்கன் திருச்சபையின் மிஷனரியாகவும் கல்வியாளராகவும் தொண்டாற்றினார்.

அவரது தாய் ஃபிரான்சினா ஃபோர்டு சொராப்ஜி பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றியவர். புனே பகுதியில் பெண்களுக்காகப் பல பள்ளிகளை நிறுவி, "பெண்களும் கல்வி பெற வேண்டும்" என்ற விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தினார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதே அரிதாக இருந்த அக்காலத்தில், சமூகச் சேவையையும் கல்வியையும் வலியுறுத்திய அவரது குடும்பச் சூழல், கார்னிலியாவுக்கு மிகச் சிறந்த கல்வியைப் பெற்றுத் தந்தது.

தடைகளைத் தாண்டிய கல்விப் பயணம்

புனே டெக்கான் கல்லூரியில் பயின்ற அவர், 1888-ஆம் ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற மாபெரும் வரலாற்றைப் படைத்தார்.

அவரது கல்வித்திறனைக் கண்ட இங்கிலாந்து கல்வியாளர்கள் அவருக்கு உதவித்தொகை வழங்கினர். இதன் மூலம் 1889-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாமர்வில் கல்லூரியில் (Somerville College) சட்டம் பயிலச் சென்றார். தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றபோதும், அக்காலத்தில் பெண்களுக்குப் பட்டம் வழங்கும் விதிமுறை இல்லாததால் உடனடியாக அவருக்குப் பட்டம் வழங்கப்படவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு, சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து 1922-ஆம் ஆண்டிலேயே அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகப் பட்டத்தை வழங்கியது.

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்

1894-ல் இந்தியா திரும்பிய கார்னிலியாவுக்குப் பெரிய சவால் காத்திருந்தது. சட்டம் படித்திருந்தாலும், இந்தியாவில் பெண்கள் நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்கப்படாததால் அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியவில்லை.

எனினும் அவர் மனம் தளரவில்லை. குறிப்பாக, வெளி ஆண்களிடம் நேரடியாகப் பேசவோ, நீதிமன்றங்களுக்குச் செல்லவோ முடியாத ‘பர்தாநஷின்’ (Purdahnashin) பெண்களுக்கு இலவசமாகச் சட்ட ஆலோசனைகளை வழங்கத் தொடங்கினார். சொத்துரிமை, பரம்பரை உரிமை மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைக்க அவர் அயராது பாடுபட்டார்.

சட்ட உரிமைகளுக்கான நெடிய போராட்டம்

"சட்டத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் செயல்பட வேண்டும்" என்ற கொள்கைக்காக அவர் பல ஆண்டுகள் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

அவரது இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, 1923-ஆம் ஆண்டு பெண்கள் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்வதிலிருந்த தடைகள் சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1924-ல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட கார்னிலியா, அதிகாரப்பூர்வமாக "இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்" என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார்.

சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பும்

கார்னிலியாவைப் பொறுத்தவரை, அவரது கிறித்தவ விசுவாசம் என்பது வெறும் தனிப்பட்ட நம்பிக்கையாக இல்லாமல், மாபெரும் சமூகப் பொறுப்பாகவே வெளிப்பட்டது. அவரது கடிதங்களிலும் எழுத்துகளிலும்,

*"பலவீனமானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது இறைவன் அளித்த கடமை"*
என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்திருந்தது.

* ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் சொத்துரிமைகளைப் பாதுகாத்தார்.

* பெண்களின் கல்வியை அடிமட்டத்திலிருந்து ஊக்குவித்தார்.

* பெண்கள் சட்டம் பயிலவும் நீதித்துறையில் தைரியமாக நுழையவும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

எழுத்துப் பணி

சட்டப் பணிகளுக்கு மத்தியிலும் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்த அவர், தனது வாழ்வியல் அனுபவங்களையும் இந்தியப் பெண்களின் நிலையையும் பல நூல்களாகப் பதிவு செய்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

*India Calling* (இந்தியா காலிங்)

*Between the Twilights* (பிட்வீன் தி ட்விலைட்ஸ்)

*Love and Life Behind the Purdah* (லவ் அண்ட் லைஃப் பிஹைண்ட் தி பர்தா)

*Sun-Babies* (சன்-பேபீஸ்)

வரலாற்றுச் சுவடு

1929-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற கார்னிலியா, தனது இறுதிக் காலத்தை இங்கிலாந்தில் கழித்தார். 1954 ஜூலை 6 அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

கார்னிலியா சொராப்ஜியின் வாழ்க்கை, கிறித்தவ மிஷனரிகளின் கல்விப் பணி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆகியவை இணைந்தபோது இந்தியாவில் எத்தகைய வரலாற்றுச் சாதனைகள் உருவாக முடியும் என்பதற்கு ஒரு மறுக்க முடியாத சான்றாகத் திகழ்கிறது. அவரது வாழ்க்கை, கல்வி என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த ஆயுதம் என்பதையும் நிரூபிக்கிறது.

வெங்கடேசன்

23/07/2026

#ஆர்த்தர்_மர்க்காஷியஸ்

ஒரு ஊரின் பெயரை கேட்டவுடன் அந்த அற்புத மனிதரின் நினைவுகளை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட மனிதரை அந்த மண்ணின் மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். யார் அவர்?

#நாசரேத்

(24 December 1852 – 27 April 1908)

20/07/2026

வரலாற்றில் பலராலும் அறியப்படாத ஒரு மாமனிதர் பால் சாண்டாகிரன் .....

17/07/2026

அடித்தட்டு மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த சாமுவேல் மேட்டீர்....

15/07/2026

உலக வரலாற்றின் பக்கங்களின் பைபிளின் தாக்கங்கள்.தொல்லியல் கண்டுபிடிப்புகளின் ஆச்சரியமூட்டும் தகவல்கள்

Want your public figure to be the top-listed Public Figure in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Coimbatore