LankaFire.Com

LankaFire.Com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LankaFire.Com, News & Media Website, Wellawatta, Colombo.

Photos from LankaFire.Com's post 12/05/2026

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்

12/05/2026

அம்பலாந்தோட்டையில் மூவர் கொலை வழக்கின் சந்தேகநபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்

12 மே 2026

Ambalantota மாமடல அலகொட பகுதியில் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலைச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூவர்கொலைச் சம்பவத்தில் முக்கிய சந்தேகநபராகக் கருதப்பட்ட இளைஞர் ஒருவர், நேற்று (11) இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரது தலை உடலிலிருந்து பிரிக்கப்பட்டு, மாமடல சந்தியில் உள்ள ரத்னாவளி தேவியின் சிலையின் மேல் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் அம்பலாந்தோட்டை மாமடல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமான வீரவசேகர ஆராச்சிகே லக்மால் சந்தருவன் (அல்லது “பொடி”) ஆவார்.

போலீசார் தெரிவித்ததாவது, 2025 பிப்ரவரி 2 அன்று அலகொட பகுதியில் ஒரு வீட்டில் இடம்பெற்ற மூவர்கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்பதாகும். அந்தச் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர்; தற்போது உயிரிழந்த “பொடி” அந்த வழக்கின் முக்கிய சந்தேகநபராகக் கருதப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணைகளின்படி, துப்பாக்கி மற்றும் மச்செட்டியுடன் வந்த மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலின்போது வீட்டிலிருந்தவர்கள் எதிர்த்து போராடியதாகவும், உயிரிழந்த நபரின் மனைவியின் தந்தைக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவரது உடலை அவமதிக்கும் வகையில் தலை தனியாக எடுத்துச் சென்று தெய்வச் சிலையின் மேல் வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“போலீஸ் இல்லையெனில்… நாட்டிற்கு என்ன ஆகும்?”

இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகின்றன:

“போலீஸ் இல்லையெனில்… நாட்டிற்கு என்ன ஆகும்?”

சட்டத்தை தாமாகக் கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் செயல்கள் சாதாரணமாகிவிட்டால், மனித உயிர்களின் பாதுகாப்பில் மக்களின் நம்பிக்கை படிப்படியாக சிதைந்துவிடும்.

ஒரு நாகரிகமான சமூகத்திற்கு தேவையானது மேலும் இரத்தப்பாய்ச்சி அல்ல; சட்டம் நியாயமாகச் செயல்படும் ஒரு நீதிமுறை அரசாகும். குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது நீதிமன்றத்தின் வழியேதான்; தனிப்பட்ட பழிவாங்கலின் மூலம் அல்ல என்பதையும் பாதுகாப்பு தரப்புகள் வலியுறுத்துகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக Sri Lanka Police மற்றும் விசேட போலீஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

09/05/2026

உயிர் அச்சுறுத்தலில் மனித உரிமை செயற்பாட்டாளர் அலைமகள் “அலையக்கா” – சர்வதேச தலையீடு அவசியம் என்ற கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் முன்னணி குரலாக திகழ்ந்து வரும் ஈழத் தமிழ் பெண்மணி அலைமகள், பொதுவாக “அலையக்கா” என அறியப்படுபவர், தற்போது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலின் கீழ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் இவர், தனது குடும்பத்தினரும் தனிப்பட்ட வாழ்க்கையும் பெரும் தியாகங்களுக்கு உட்பட்ட நிலையிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை உலக அரங்கில் எடுத்துச் சென்ற முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

சமீபத்தில் வெளியான அவரது குரல் பதிவில், தனது பாதுகாப்பு குறித்த கவலைகள் முறையாக கவனிக்கப்படவில்லை என்றும், தன்னுடைய எதிர்காலம் குறித்து ஆழ்ந்த மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு, ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், மனித உரிமைகளை முன்னிறுத்தும் சர்வதேச வட்டாரங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு நாடி வந்துள்ள அலையக்காவிற்கு, தேவையான பாதுகாப்பு மற்றும் அடைக்கலம் வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக அவரது நிலை சிக்கலானதாக மாறியிருக்கலாம் என்ற அச்சமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே நிலவுகிறது.

இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மற்றும் ஜனநாயக நாடுகள் உடனடியாக தலையீடு செய்து, அலையக்காவின் உயிர் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அலையக்காவின் பாதுகாப்பு என்பது ஒரே ஒருவரின் பிரச்சினை அல்ல; நீதி, உண்மை, மற்றும் மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் அனைவரின் பாதுகாப்பையும் சோதிக்கும் ஒரு சர்வதேச பொறுப்பாக இது பார்க்கப்படுகிறது.

05/05/2026

இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரிட்டன் நாட்டிற்கான தூதுவர் அன்ட்ரேவ் பற்றிக் {andrew Patrick}மற்றும் கனடா நாட்டிற்கான தூதுவர் இஷவெல்லா மார்ட்டின் {Isabella Martin} ஆகியோர் ஒரு சில நாட்களாக பல் வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 05.05.2026 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ச.சிவயோகநாதன் அவர்களுடனான சந்திப்பானது காலை 8.30 மணிவரை மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள Clam விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு பட்ட விடயங்களும் கலந்துரையாடப் பட்டதுடன் பல கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.

கலந்துரையாடப்பட்ட விடயங்களில் சில பின் வருமாறு

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் பிரச்சனை.

அரசு மூலம் புதிதாக மட்டக்களப்பு மாவட்டத் தில் ஏற்படுத்தப்பட்டு வரும் பண்ணையாளர் சங்கங்கள்.

கானாமலாக்கப் பட்டோ ருக்கான சர்வதேச நீதி பொறிமுறை.

அரச திணைக்களங்கள் மூலமான காணிகள் ஆக்கிருமிப்பு.

அரசின் பிரஜாசக்தி செயற்பாடுகள்.
மற்றும் சமகால அரசியல் தொடர்பாக வும் கலந்துரையாடப் பட்டது.

04/05/2026

விஜய்யின் கட்சி 107 ஆசனங்களை வென்றெடுத்த அதிசயம் மாதிரி, இன்னொரு அதிசயம் நடப்பதற்கான சாத்தியமும் - தமிழக அரசியலில் உள்ளது.

அது என்ன?

முன்னைய பதிவு ஒன்றில் - கட்சிகளுக்கு கிடைத்த ஆசனங்கள் பற்றிய தகவலில் சிறிய தவறுகள் உள்ளன.

இப்போது பிபிசி வெளியிட்டுள்ள விவரங்களின் படி, திமுக - 74, அதிமுக - 53, தவெக - 107 ஆசனங்களை வென்றுள்ளன.

மொத்தமாக தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளையும் மேற்படி மூன்று அணிகளும்தான் கைப்பற்றியிருக்கின்றன.

ஆனாலும் 118 என்கிற பெரும்பான்மை ஆசனங்களை யாரும் பெறவில்லை. எனவே, கூட்டணி ஆட்சிதான் அங்கு நடக்கப் போகிறது. இல்லாவிட்டால், ஜனாதிபதியின் கீழ் ஆட்சி செல்லும்.

அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுள்ள தவெக-வுக்கு ஆட்சியமைக்க இன்னும் 10 ஆசனங்கள் மட்டுமே தேவையாக இருக்கிறது.

திமுக அல்லது அதிமுக அல்லது இரண்டு கட்சிகளுடனும் கூட்டணியமைத்து வெற்றிபெற்றுள்ள சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, தவெக ஆட்சி அமைக்க முடியும்.

சிலவேளை, அதிமுகவுடன் பேசியும் விஜய் - ஆட்சியமைக்கலாம்.

ஆனால், இன்னொரு பக்கமும் உள்ளது. திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒரு சாத்தியமும் இருக்கிறது.

திமுகவின் 74+ அதிமுகவின் 53 ஆசனங்கள் சேர்ந்தால் 127 ஆசனங்கள் வந்து விடும்.

“நாம ரெண்டுபேரும் அடிச்சிக்கிட்டாலும் ஏசிக்கிட்டாலும், அண்ணன் - தம்பின்ணே. அவன உள்ள விடக் கூடாதுண்ணே” என்று சொல்லி, ஸ்டாலினும் எடப்பாடியாரும் கட்டிப் பிடித்துக் கொண்டால்...

விஜய் 108 ஆசனங்களை வென்றெடுத்த அதிசயம் மாதிரி, முதல்வர் ஆசனத்திலும் ஓர் அதிசயம் நடக்கலாம்.

நடக்கும் என்பார் - நடக்காது, நடக்காதென்பார் - நடந்து விடும்.

அதுதானே அரசியல்.

03/05/2026

இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது..!

03/05/2026

லங்கா ஃபயர் செய்தி தளம் – ஆய்வறிக்கை
(தில்லையடி ஈத் ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2026 தொடர்பாக)

தில்லையடி பகுதியில் ஒன்பது ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விளையாட்டு திருவிழா மீண்டும் உயிர்ப்புடன் நடத்தப்பட்டமை, அந்தப் பகுதியின் சமூக மற்றும் விளையாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பதிவு செய்யப்படுகிறது.

2026 பெப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தொடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாக 22/03/2026 அன்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பிரமாண்ட மைதானம் ஓட்டப்பந்தய திடலாக மாற்றப்பட்டு, இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் இந்த விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டது என்பது சிறப்பான சமூக முயற்சியாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்வின் திட்டமிடல் மற்றும் வெற்றிகரமான நிறைவேற்றம் தொடர்பாக லங்கா ஃபயர் செய்தி தளம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், புத்தளம் மாவட்ட விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் மூலம் பெற்றுக் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட மேலதிக தகவல்கள் அடிப்படையில். திரு. #தங்கராஜா #சுசி #குமார் ( #துசியா) அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆய்வில் வெளிப்பட்ட முக்கிய அம்சங்கள்:

ஒன்பது ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விளையாட்டு திருவிழாவை மீண்டும் நடத்தும் யோசனையை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த முனைந்த முக்கிய நபராக திரு. சுசி குமார் அடையாளப்படுத்தப்பட்டார்.

தில்லையடி இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல நலன்விரும்பிகளை ஒருங்கிணைத்து நிகழ்வை முன்னெடுக்கத் தேவையான சமூக ஆதரவை உருவாக்கியுள்ளார்.

தலைவராக முன்னின்று நிகழ்வின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தையும் புதிய திறன்களையும் ஊக்குவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டும் நோன்புப் பெருநாளும் இணைந்த “ #தில்லையடி_ஈத்_ஸ்போர்ட்ஸ்_ஃபெஸ்டிவல்” எனும் கருத்தாக்கம் மூலம் நல்லிணக்கத்திற்கான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளார்.

நிகழ்வு முழுவதும் ஒழுங்கும் கட்டுப்பாடும் சிறப்பாக பேணப்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களோ அல்லது மோதல்களோ இன்றி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்களிப்புடன் மட்டுமின்றி, தமது குழுவினருடன் இணைந்து திறமையான வழிநடத்தலை வழங்கியுள்ளார்.

மேற்கண்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, #தில்லையடி சமூகத்தில் விளையாட்டு கலாச்சாரத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மீண்டும் உயிர்ப்பித்ததில் திரு. தங்கராஜா சுசி குமார் (துசியா) அவர்களின் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் முயற்சி பாராட்டத்தக்கதாக லங்கா ஃபயர் செய்தி தளம் தனது ஆய்வின் மூலம் அறிவிக்கிறது.

மேலும், இந்த நிகழ்வு எதிர்காலத்தில் தில்லையடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இளைஞர் முன்னேற்றத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுவான அடித்தளமாக அமையும் என்பதும் இவ் ஆய்வின் இறுதி முடிவாக பதிவு செய்யப்படுகிறது.

லங்கா ஃபயர் செய்தி தளம்
(ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவு)

18/04/2026

🔴இன்றைய தினம் ஆளுனர் தலைமையில் இடம் பெற்ற மணல் சம்மந்தமான கூட்டத்தில்
மன்னாரில் இதுவரை இடம் பெற்றுள்ள சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்திய பொறியியளாலர் விமலேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்

🔴இன்றைய கூட்டத்தில் பலர் விழி பிதிங்கினர்

🔴காரணம் ஆதாரபூர்வமான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்

🔴இன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மிக முக்கியமானவை

🔴அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மன்னாரில் மணல் மாபியாக்களின் ஆட்டம் அடங்கும்

🔴மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும்

🔴இயற்கை வழங்கள் பாதுகாக்கப்படும்

13/04/2026

🔴 அமிர்தநாதன் அடைக்கலநாதன்

🔴26 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர்

🔴மன்னாருக்கு செய்தது என்ன?

பிறந்த இடம்: மன்னார், இலங்கை

கட்சி: தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) - தலைவராக 1986 முதல்.

​அரசியல் கூட்டணி: தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) - துணைச் செயலாளர்.

​வன்னி மாவட்டத்தின் நீண்டகால மக்கள் பிரதிநிதியான இவர், 2000ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.

​2015-2020: நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளராகப் பொறுப்பு வகித்தார்.

2024-க்குப் பின்னரான தற்போதைய நாடாளுமன்ற அமர்வுகளிலும், தெரிவுக்குழுக்கள் (Committee of Selection) மற்றும் சுற்றுலா, காணி தொடர்பான ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

​2024 தேர்தல்: வன்னி மாவட்டத்தில் 5,695 வாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

​அரசியல் பங்களிப்புகள்:
​தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த குரல்.

​வன்னி மாவட்ட உள்கட்டமைப்பு மற்றும் மீள்குடியேற்றப் பணிகளில் பங்களிப்பு.

​🎓 கல்வித் தகுதி:

​இலங்கையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் (G.C.E A/L) வரை பயின்றுள்ளார்.

​📊 தேர்தல் வெற்றி (விருப்பு வாக்குகள்):

வன்னி மாவட்டத்தில் தொடர்ந்து 26 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள இவரது தேர்தல் தரவுகள்:

​⛔️2000: 15,490 வாக்குகள் (TELO) - வெற்றி

​⛔️2001: 28,548 வாக்குகள் (TNA) - வெற்றி
​⛔️
2004: 39,535 வாக்குகள் (TNA) - வெற்றி

⛔️2010: 17,366 வாக்குகள் (TNA) - வெற்றி

​⛔️2015: 26,397 வாக்குகள் (TNA) - வெற்றி

⛔️2020: 18,563 வாக்குகள் (TNA) - வெற்றி

​⛔️2024: 5,695 வாக்குகள் (DTNA) - வெற்றி

🔴செல்வம் அடைகலநாதன் தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

🔴26 வருடங்கள் அவருடைய அரசியல் பணி மன்னார் மாவட்டத்துக்கு போதுமானதா?

🔴செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்டத்துக்கு செய்த?செய்யாத விடயங்கள் எவை?

🔴வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள் என்பதை மறக்காம comment பன்னுங்க


12/04/2026

🔴ரிஷாட் பதியுதீன்

🔴24 வருடங்களுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்

🔴மன்னாருக்கு செய்தது என்ன?

​வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக ஏழாவது முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அரசியல் பயணம் மற்றும் கல்வித் தகைமைகள் குறித்த விபரங்கள்

​கல்விப் பின்னணி:

அரசியல் பிரவேசத்திற்கு முன்பே தொழில்நுட்பத் துறையில் தடம் பதித்த இவர், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் துறையில் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாவை (NDT) பூர்த்தி செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது கல்வித் தகுதியை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்திய அவர், பிரித்தானியாவின் நியூ பக்கிங்ஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (LLB) பட்டத்தையும், குளோஸ்டர்ஷையர் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலை (MBA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், அவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச பொறியியல் நிறுவனங்களில் (IIESL, CIE-London) உறுப்பினராகவும் உள்ளார்.

​நாடாளுமன்ற மற்றும் அரசியல் செயல்பாடுகள்:

2001 ஆம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான இவர், கடந்த 25 வருடங்களாக வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

தனது அரசியல் காலத்தில் மீள்குடியேற்றம், கைத்தொழில் மற்றும் வணிக விவகாரங்கள் போன்ற முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

தற்போது 10-வது நாடாளுமன்றத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.

​தேர்தல் பெறுபேறுகள் (2001 - 2024):

வன்னி மாவட்டத்தில் வெவ்வேறு கூட்டணிகளின் கீழ் போட்டியிட்ட போதிலும், இவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்கு விபரங்கள் வருமாறு:

​⛔️2001: 9,276 வாக்குகள்

​⛔️2004: 15,973 வாக்குகள்

​⛔️2010: 27,519 வாக்குகள்

​⛔️2015: 26,235 வாக்குகள்

​⛔️2020: 28,203 வாக்குகள்

​⛔️2024: 21,018 வாக்குகள்

​யுத்தத்திற்குப் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சார்ந்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் அவர், தற்போது வன்னி மாவட்டத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகச் செயற்பட்டு வருகின்றார்.

🔴ரிஷாட்பதியுதீன் தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?

🔴24 வருடங்களுக்கு மேலான அவருடைய அரசியல் பணி போதுமானதா?

🔴மன்னார் மாவட்டத்திற்கு செய்த? செய்யாத விடயங்கள் எவை?

🔴வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள் என்பதை மறக்காம comment பன்னுங்க

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address

Wellawatta
Colombo