KuralMax.com
“KuralMax Trend News delivers the latest Tamil news, breaking updates, and trending stories — fast,
18/06/2026
டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி.
அட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய தினம் சேவையில் ஈடுபடாத காரணத்தால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புறூக், அல்பியன், டொரிங்டன், பிரஸ்டன், ஆட்லோ, பிரேமோர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்தொன்றை உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடைமுறைகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஏற்படும் போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு பொருளாதார இழப்புகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
மாதாந்த பருவகால சீட்டுகளை முன் கூட்டியே பணம் செலுத்தி பெற்று அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் பணம் செலுத்தி கால நேரத்திற்கு செல்ல முடியாது உள்ளது.
ஹட்டன் போடைஸ் – டயகம பாதையில் தினசரி முறையான மற்றும் தடையற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச நிலைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
ஹட்டன் கல்வி வலையத்திற்கு புதிய பலம் – பிரதிக் கல்விப் பணிப்பாளராக எம். கிருபாகரன் பதவியேற்பு
ஹட்டன் கல்வி வலையத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக எம். கிருபாகரன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
அட இது காதலா
சமூக ஊடகங்கள் தவறானவை அல்ல.
ரேடியோ மட்டுமே சிறந்தது என்றும் சொல்ல முடியாது.
இரண்டிற்கும் தனித்தனி பலங்கள் இருக்கின்றன.
17/06/2026
கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்
கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (17) கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் நிஷாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கேகாலை மாவட்டத்தின் 67 பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் 3,122 மாணவர்கள் மற்றும் சேவையாற்றும் 782 ஆசிரியர்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடைவிலகல் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான சவால்களை அதிபர்கள் முன்வைத்தனர். மேலும், பெருந்தோட்ட பாடசாலைகளை மாதிரி பாடசாலைகளாக மாற்றுதல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்துதல், விளையாட்டு மைதானங்கள் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், நிதி ஒதுக்கீடுகளில் ஏற்படும் தாமதம், நிர்வாக சிக்கல்கள் மற்றும் பெற்றோர் – ஆசிரியர் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், கேகாலை மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பெருந்தோட்ட பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “பெருந்தோட்ட பாடசாலை என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது எமது சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் மையமாகும். அதிபர்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என தெரிவித்தார்.
– KuralMax News
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Hatton
0094
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |