Delft Reporter

Delft Reporter

Share

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”

01/09/2026

நெடுந்தீவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கலப்பு மின்உற்பத்தி நிலையத்தில் இருந்தே சமீப காலமாக நெடுந்தீவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மின் வடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினை தொடர்ந்து அந் நிலையத்தின் தன்னியக்க மின்பிறப்பாக்கிகள் தமது மின் உற்பத்தியை நிறுத்திக் கொண்டன. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மீண்டும் முன்னர் பயன்பாட்டில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்தே மின் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

31/08/2026

இருளில் மூழ்கிய நெடுந்தீவு.

30/08/2026 இரவு 11.00 மணி தொடக்கம் நெடுந்தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்நிலையத்தில் ஏற்ப்பட்ட தடங்கல்கள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது .

30/08/2026

பெற்றோல் விலை குறைப்பு.!

30. 08. 2026 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

Photos from Delft Reporter's post 30/08/2026

நெடுந்தீவு புனித மரியன்னை ஆலயத்தின் வருடாந்த நவநாள் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

29/08/2026

நெடுந்தீவு கிழக்கு சன்னாங்குளம் புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்களுக்கும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு. சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று மதியம் இடம் பெற்றது.

29/08/2026

நெடுந்தீவு கிழக்கில் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியே சன்னாங்குளம் புனரமைப்பு பணிகளுக்காக திருப்பி விடப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு கருணைநாதன் இளங்குமரன் அவர்களிடம் வினவிய போது....

29/08/2026

மூன்று மாத காலமாக திருத்தப்படாத நீர்க் கசிவு!
"பாராளுமன்ற உறுப்பினர் கதைத்தால் தான் வேலை நடக்கிறது, அது தானே இங்கு உள்ள பிரச்சனை" யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. கருணைநாதன் இளங்குமரன் விசனம்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இன்று சென்று பார்வையிட்டு அங்கிருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடினர்.

28/08/2026

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. இளங்குமரன் கருணைநாதன் அவர்கள் இன்று நெடுந்தீவில், பனை அபிவிருத்திச் சபையின் 'கற்பகம்' திறப்பு விழாவில் கலந்து கொண்டு நெடுந்தீவின் அபிவிருத்தி சம்மந்தமாக ஆற்றிய உரையின் தொகுப்பு

28/08/2026

இன்று நெடுந்தீவில் இடம்பெற்ற இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் 'கற்பகம்' விற்பனை நிலைய திறப்பு விழாவில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. இராசா இரவீந்திரன் அவர்கள் ஆற்றிய தலைமை உரையின் ஒரு பகுதி.

28/08/2026

இலங்கை பனை அபிவிருத்திச் சபையின் 'கற்பகம்' விற்பனை நிலையம் இன்று காலை நெடுந்தீவில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையத்தில் பனைசார் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து உற்பத்தியாகும் பனைசார் பொருட்கள் கொள்வனவும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Category

Telephone

Address

Mavili/Periyathurai Road, Delft 12
Jaffna
40000