E TV
இது மக்களின் "தெவிட்டாத குரல்"
♦ நேரடி ஔிபரப்பு
♦ விளம்பரங்கள்
♦அறிவிப்பாளர்கள்
♦Sound system
(0742392323/0752392325/0715441444)
02/10/2026
#காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
*******************************
(தில்சாத் பர்வீஸ்)
அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (02) அதிகாலை சுமார் 5 மணியளவில் நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Note:சித்தரிக்கப்பட்ட படம்" (Illustrative Image) அல்லது "AI மூலம் உருவாக்கப்பட்ட மாதிரிப் படம்
02/10/2026
#பொருளாதார சவால்களை வெல்ல சிறார்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் அவசியமாகும் - வுமென்ஸ் கோர்ப்ஸ் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்து!
**********************************
(எம் ஆர் நஜீட் அஹமட்)
தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கச் சவால்களுக்கு மத்தியில், சாதாரண மக்களின் அன்றாடச் சேமிப்புப் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்கால சந்ததியினரான மாணவர்கள் மத்தியில் சிறுவயதிலேயே சேமிப்பு உணர்வை விதைப்பது காலத்தின் மிக முக்கிய அவசியமாகும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்துடன் இணைந்து நடாத்திய "ஸ்மார்ட்போன் உலகில், ஸ்மார்ட்டான சேமிப்பு!" எனும் விசேட சிறுவர் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் தொடக்க விழா நேற்று (01) வியாழக்கிழமை எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"நாட்டின் பொருளாதார சவால்களால் குடும்பங்களின் சேமிப்புத் திறன் மழுங்கடிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், மாணவர்கள் மத்தியில் சிறுவயதிலேயே நிதி சார்ந்த திட்டமிடலையும் சேமிப்புப் பழக்கத்தையும் ஊக்குவிப்பது காலத்தின் பிரதான தேவையாக உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் வாழும் எமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை வளமாக்கவும், சேமிப்பின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தவும் 'வுமென்ஸ் கோர்ப்ஸ் - ஸ்ரீலங்கா' அமைப்பு இம்மாபெரும் விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
'உங்கள் உண்டியலில் தொடங்கும் சேமிப்பே, நாளை உங்கள் உயரிய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்!' என்ற தொனிப்பொருளில் மாணவர்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வையும், நாளைய உயரிய எதிர்காலத்திற்கான விதையையும் விதைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
சிறார்களின் அன்றாடச் செலவுகளைச் சீரமைத்து சேமிப்பை ஒரு நற்பழக்கமாக மாற்ற ஊக்குவித்தல், சிறுவயதிலேயே பணத்தின் மதிப்பு மற்றும் அதன் முறையான பயன்பாட்டைப் புரியவைத்தல், அத்துடன் நவீன தொழில்நுட்பம் நிறைந்த உலகில் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சேமிப்புகளை எவ்வாறு பொறுப்புடன் கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இச்சேமிப்பு திட்டத்தின் பிரதான இலக்குகளாகும்," எனவும் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு, அவர்களின் கரங்களினாலேயே சேமிப்பு பழக்கத்தை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு அதற்கான பணமும் வழங்கி உண்டியலில் போடப்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கு சிறுவர் தின சிறப்பு இனிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், எம்.எஸ்.காரியப்பர் பாலர் பாடசாலைக்கான நிதி உதவியும் வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பினால் இதன்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப், ஆசிரியைகளான ஏ.எம். அஸ்மினா, எம்.எம். பர்வீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஐ.எப் நஹ்லா, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபீதா உட்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
01/10/2026
#சிறுவர் தினத்தை முன்னிட்டு, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பினால் "ஸ்மார்ட்போன் உலகில், ஸ்மார்ட்டான சேமிப்பு!" சிறுவர் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு!
*****************************
(எம்.ஆர்.நஜீட் அஹமட்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பு
சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்துடன் இணைந்து "ஸ்மார்ட்போன் உலகில், ஸ்மார்ட்டான சேமிப்பு!" எனும் சிறுவர் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தினை இன்று (01) வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளது.
வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு மாணவர்களின் கைகளினால் சேமிப்பு பழக்கத்தை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு அதற்கான பணம் வழங்கி உண்டியலில் போடப்பட்டதுடன் மாணவர்களுக்கு சிறுவர் தின இனிப்பும் வழங்கப்பட்டது.
மேலும் அதிதிகளால் சிறுவர் தினக் கேச் வெட்டி மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் எம்.எஸ்.காரியப்பர் பாலர் பாடசாலைக்கு வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பினால் நிதி உதவியும் இதன்போது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஆரிப், ஆசிரியைகளாக ஏ.எம். அஸ்மினா, எம்.எம். பர்வீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஐ.எப் நஹ்லா வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.முபீதா உள்ளிட்ட பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் யுகத்தில் வாழும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை வளமாக்கவும், சிறுவயதிலேயே சேமிப்பின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தவும் "வுமென்ஸ் கோர்ப்ஸ் - ஸ்ரீலங்கா" அமைப்பு ஒரு விசேட விழிப்புணர்வு திட்டத்தை சிறுவர் தினத்தை முன்னிட்டு முன்னெடுத்துள்ளது.
"உங்கள் உண்டியலில் தொடங்கும் சேமிப்பே, நாளை உங்கள் உயரிய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்!" தொனிப்பொருளில்
மாணவர்களிடையே நிதி சார்ந்த விழிப்புணர்வையும், நாளைய உயரிய எதிர்காலத்திற்கான விதையையும் விதைப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01/10/2026
28/09/2026
#ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
****************************
(எம்.ஆர்.நஜீட் அஹமட்)
சிலோன் மீடியா போரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத் திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபமா மங்கள விக்கிரமராச்சி அவர்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வைத்து, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அஞ்சல் அத்தியட்சகரும் சிலோன் மீடியா போரத்தின் ஆலோசகருமான யூ.எல்.எம்.பைசர் பங்கேற்றிருந்தார்.
இதன் போது இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம் குறித்து விரிவாக அரசாங்க அதிபருக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
27/09/2026
#ஊடகவியலாளர் நம்பிக்கை நிதிய திட்ட முன்மொழிவு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரிடம் கையளிப்பு
*******************************
(எம்.ஆர்.நஜீட் அஹமட்)
சிலோன் மீடியா போரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள "இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்" (Sri Lanka Journalists Trust Fund) உருவாக்கத்திற்கான உத்தியோகபூர்வ திட்ட முன்மொழிவு அறிக்கை, முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அல்-ஹாஜ் எம் நபவி அவர்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை (24) கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து, சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம். ஜெஸ்மின், ஸ்கை தமிழ் நியூஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே. எம். வாசித், ஸ்கை தமிழ் நியூஸ் நிறுவனத்தின் முகாமையாளர் பாத்திமா ஆக்ஷிகா பர்சான் ஆகியோ பங்கேற்றிருந்தனர்.
Category
Contact the business
Telephone
Website
Address
Kalmunai
Alerts
Be the first to know and let us send you an email when E TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.