S.Ananth

S.Ananth

Partager

Photos from Vizhi news விழி செய்திகள்'s post 09/08/2026
09/08/2026

வெப்பத்தைச் சமாளிக்க நாய் இறைச்சி சூப் பரிந்துரை!

வடகொரியாவில் நாய் இறைச்சி சூப் அருந்துமாறு அந்நாட்டின் ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ரோடாங் சின்முன் மூலம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில், கடும் வெப்பம் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் தைராய்டு கோளாறுகள் தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதிலிருந்து தப்பிக்க, தர்பூசணி, வெள்ளரி, பாசிப்பயறு, மீன் கஞ்சி ஆகியவற்றுடன் இந்த நாய் இறைச்சி சூப்பையும் உண்ணுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாய் இறைச்சி சூப், வடகொரியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இது உடலுக்கு ஆற்றலைத் தரும் என்றாலும், வெப்பத்தைத் தணிக்க உதவும் என்பதற்கு எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

வடகொரியாவில் நாய் இறைச்சி, அரசால் ஊக்குவிக்கப்படும் கலாச்சார உணவாகக் உள்ளது. உணவகங்களில் முக்கியமான உணவாக இருப்பதுடன், நாய் கறி தொடர்பான பாரம்பரிய சமையல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

அதேவேளையில், தென்கொரியா இதற்கு மாறான பாதையில் பயணிக்கிறது. இறைச்சிக்காக நாய் வளர்ப்பது, கொல்வது மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை இயற்றியுள்ளது.

ஒரே தீபகற்பத்தைச் சேர்ந்த இரு நாடுகள், ஒரே கடுமையான கோடை வெப்ப அலையை எதிர்கொள்ளும் போதிலும், உணவு கலாச்சாரத்திலும் விலங்கு நலக் கொள்கையிலும் இருவேறு துருவங்களாகச் செயல்படுகின்றன.

கோடைக்கால வெப்பத்தைச் சமாளிக்க வினோதமான தீர்வை வழங்கியிருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

உலகெங்கும் கோடைக்கால வெப்ப அலை மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், வடகொரியாவில் வினோதம்

எமது பக்கத்தை (Follow) பின்தொடருங்கள்

#விழிசெய்திகள்

06/08/2026
31/07/2026

அநுர அரசு ஆட்சிக்கு வந்து இரு ஆண்டுகள் ஆகியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான ஊடக நிறுவனங்கள் மீதான விசாரணைகளை இதுவரை ஆரம்பிக்காத நிலையில்,

உடனடியாக விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்கு காரணமான ஊடக படுகொலையாளிகளை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி

யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 7.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகம் முன்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே அனைத்து ஊடகவியலாளர்களும் குறித்த போராட்டத்தில் பங்கெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தலைவர்
யாழ் ஊடக அமையம்.
31.07.2026

எமது பக்கத்தை பின்தொடருங்கள்!

#விழி #விழிசெய்திகள் #ஊடகவியலாளர்கள்

Vous voulez que votre personnage public soit Personnage Public la plus cotée à Paris ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Site Web

Adresse


Paris