Kshatriyas - The Ruler
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kshatriyas - The Ruler, Community Center, Chennai.
30/09/2026
முன்னாள் வன்னியர்சங்க மகளிரணி செயலாளராக திறம்பட செயல்பட்ட வீரமங்கை அம்மா நவமணி சீனீவாசன் அவர்களுடைய காரிய நிகழ்ச்சி நாளை காலை சென்னையில் நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
.
இடைத்தேர்தலுக்கு அப்புறம் மட்டும் பாமக தவெகவுடன் கூட்டணி வைத்து சௌமியா அன்புமணி அமைச்சரானார் என்றால் அதன் பிறகு பாமக காணாமல் தான் போகும்.
ஏற்கனவே திரு. அன்புமணி அவர்கள் MP பதவிக்காக மட்டுமே திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து வன்னிய மக்களை ஏமாற்றினார்.
இப்போது சௌமியாவும் இதே பாணியை கையிலெடுத்து இடைத்தேர்தலில் மறைமுகமாக ஆதரவு கொடுத்து பிறகு அமைச்சர் பதவியை பெற்றார் என்றால் பாமகவை நம்பிய மக்கள் அதோடு தூக்கியெறிந்துவிடுவார்கள்.
இப்போ சொல்வது பொய் என்று தெரிந்தால் மக்கள் இதைத்தான் செய்வார்கள்.
TVK வளர்ந்து வரும் தருணத்தில் ஏன் இந்த ஆணவப்பேச்சு.
தமிழ்நாட்டிலும் சரி பாண்டிச்சேரியிலும் சரி இப்போது ஆதிக்கம் செலுத்துவது மார்ட்டின் குடும்பம் தான்.
திமுகவுக்கு 500 கோடி கொடுத்தோம் என்று சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக பேசும் அளவுக்கு தைரியம் உள்ள அரசியல்வாதி. நீ ஜெயித்தால் என் பொதுச்செயலாளர் பதவியையே விட்டுவிடுகிறேன் என்று பேசும் அளவுக்கு கொண்டு வந்த திமுக,
அடுத்து நீங்கள் இந்த இடைத்தேர்தலிலோ அல்லது உள்ளாட்சி தேர்தலிலோ ஜெயித்தால் தவெக கட்சி தமிழ்நாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கி கொள்ளும் என்று பேச வைப்பார்கள் போல திமுக.
எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி அவர்களின் அநாகரிகமாக பேச்சு அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய இளைய தலைமுறை அரசியல் பேச்சு சினிமா பாணியில் செல்கிறது.
மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
.
ஜெம் வீரமணி என்கிற மிருகம் செய்த குற்றங்கள் எப்படி இவ்வளவு நாள் மூடி மறைக்கப்பட்டது. பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நாளுக்கு நாள் பய உணர்வோடே இருக்க வேண்டி உள்ளது.
இவர் மீது திமுக ஆட்சியில் 2025 இல் FIR பதியப்பட்டுள்ளது. அந்த FIR ஆல் தான் தவெக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதத்தின் காரணத்தை தான் இன்றைய மாண்புமிகு திரு. விஜய் தலைமையிலான தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்கிறார்கள்.
23/09/2026
புதிய தலைமைச் செயலகம் திருவிடந்தை அருகில் ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை நிலத்தில் கட்ட திட்டமிட்டால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதனை இந்தப் பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த வன்னிய சமுதாயம் 200 லட்சம்கோடி மதிப்புடைய சொத்துக்களை காக்க முடியாத திறனற்றவர்களா? இருப்பதை காப்பதைவிட்டு மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு செல்வதா?
ஆளவந்தார் நாயக்கர் சுவாமிகள் சென்னை ECR கடற்கறை பகுதிகளை ஒட்டி நெம்மேலி முதல் மகாபலிபுரம் வரையிலான பகுதிகளில் சுயமாக சம்பாதித்த சுமார் 2228 ஏக்கர் நிலங்களை ஒரு அறக்கட்டளையாக நிறுவி திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 22.6.1914 அன்று பதிந்துள்ளார்.
ஆளவந்தார் நாயக்கர் சுவாமிகள் தனது உயிலில் மேற்படி நிலங்களில் இருந்து வரும் வருவாய் மூலமாக
1. மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயனப் பெருமாள் திருக்கோயில்,
2. திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப்பெருமாள் திருக்கோயில்,
3. திருமலை திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
ஆகிய கோயில்களுக்கு கட்டளை மற்றும் அன்னதானம் ஆகியவற்றை செய்யவேண்டும் எனபதனை தனது விருப்பமாக உயிலில் தெரிவித்துள்ளார்.ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகள் இறைபணி தவிர சமயக் கல்வி வழங்கவும், தமிழ் பிரபந்தங்களை கற்பிக்கவும் செலவிடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலங்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக
🎯வனத்துறைக்கு சவுக்கு பயிரிட 546.73 ஏக்கரும்,
🎯பொது ஏலம் மூலமாக குத்தகையாக 256 ஏக்கரும்,
🎯தமிழ்நாடு காகித நிறுவனத்திற்கு 32.21 ஏக்கரும்,
🎯கடல்நீர் குடிநீர் திட்டம் அலகு-1 க்கு 40.05 ஏக்கரும்,அலகு-2 க்கு 85.51 ஏக்கரும்,
🎯கடல்நீர் குடிநீர் திட்டத்திற்கான துணை மின் நிலையத்திற்கு 4.91 ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளது.
🎯கடந்த திமுக ஆட்சியில் “கலைஞர் பன்னாட்டு அரங்கம்” கட்ட சுமார் 60 ஏக்கர் நிலம் ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
🎯தற்போது தவெக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ECR சாலை திருவிடந்தை அருகில் நித்திய கல்யாண பெருமாள் கோவில் அருகில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தினை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை கடந்த திமுக, அதிமுக ஆட்சியாளர்களைப் போலவே தவெக அரசாங்கமும் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் நோக்கில் இருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.
#ஆயிரம்காணிஆளவந்தார்நாயகர்அறக்கட்டளை
20/09/2026
இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு வீடுகட்டிகொடுக்க இடமும் அதற்கான செலவும் செய்ய முயற்சியெடுத்தது பாமகவின் மூன்று MLA என்பது தெரியவந்தது.
அந்த மூன்று MLA திரு. கணேஷ்குமார் MLA, திரு. சிவக்குமார் MLA மற்றும் திரு. வைத்தி MLA அவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்த மூன்று பாமக நிர்வாகிகளும் அன்புமணி அவர்களுக்கு மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்தார்களாம். இதை அவர்கள் ஊடகமே வெளிப்படுத்தியது.
சி.என். இராமமூர்த்தி ஐயா அவர்கள் கடந்த 15 வருடமாக பாமக தலைமையை செய்யசொல்லி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
இதுநாள்வரை செய்யவில்லை.
இப்போதாவது பாமக நிர்வாகிகளாவதுஅன்புமணி துணையோடு செய்தார்களே என்ற சந்தோஷம் வருகிறது.
2010 இல் 25 தியாகிகள் குடும்பத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் அறிவித்து வீடுகட்டிகொடுக்க முயற்சியை எடுத்தவர் ஐயா சிஎன்ஆர் அவர்கள். அப்படி வீடுகட்டி கொடுக்க தின்டிவனத்தில் ஆரம்பித்து கடக்கால் போட்டபோது அதை இராமதாசு தனது அடியாட்களை வைத்து தடுத்து அந்த கடக்காலை உடைத்துவிட்டு மணல் ஜல்லி மற்றும் கற்களை ஏற்றிச்சென்றுவிட்டனர்.
இத்தனை ஆண்டு காலம் இராமதாசு அவர்கள் தானும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் அரசியல் செய்தார்.
இப்போதாவது அன்புமணி ஆதரவாளர்கள் இரக்கப்பட்டு செய்தார்களே. அதை அன்புமணியே முன் நின்று செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனேன்றால் இனி இதை யாராலும் தடுக்க முடியாது.
பாமக நிர்வாகிகள் செய்தாலும் அதை பாமகவை முன்னிறுத்தி செய்ததால் நாம் இதை யார் செய்தார்கள் என்று ஆராய தேவையில்லை.
இதுவரை திராவிடக் கட்சிகள் மீது பழியைப்போட்டு தப்பித்த தருணம் இருந்தது. இனி நடக்காது என்ற அரசியல் புரிந்துணர்வும் இனி வன்னிய சமுதாய மக்கள் எதிர்பார்ப்பை செய்தால் மட்டுமே அரசியல் எதிர்காலம் என்பதை உணர்ந்தார்கள் என்பதே நிதர்சன உண்மை.
உரிமைகள் கிடைப்பது என்பது நீங்கள் கேட்கும் வலிமையை பொறுத்திருக்கிறது என்பதே உண்மை.
1 cent என்பது 435.6 squarefeet ஆகும்.
25 தியாகிகளுக்கு மொத்தமாகவே 10 Cent நிலம் என்றால் ஒரு சின்ன குடிசை போடக்கூட பத்தாது. Minimum ஒரு Dublex double bedroon கட்ட வேண்டும் என்றாலே 700 Sq.feet நிலம் வேண்டும் (சுமார் 1.5 Cent).
அப்படி பார்த்தால் 25 குடும்பத்திற்கும் 38 Cent நிலம் தேவை.
10 cent நிலம்தான் கொடுக்கப்பட்டது என்றால் மீதமுள்ள நிலங்களை கொடுக்க இந்த சமுதாயம் முன் வருமா?
.
இதைத்தான் கடந்த 15 வருடமாக செய்ய சொல்லி திரு. அன்புமணி அவர்களை கேட்டு வருகிறோம்.
2010 இல் சிஎன்ஆர் ஐயா அவர்கள் 25 தியாகிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க 10 லட்சம்/வீடு அறிவிப்பு செய்து தொடங்கிய போது அதை தடுத்து நிறுத்தியவர்கள் இராமதாஸ் அவர்கள்.
இராமதாசு அவர்கள் இன்றுவரை எதையும் செய்யவில்லை.
தியாகிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க சிஎன்ஆர் அவர்கள் தொடர்ந்து 2010 லிருந்து சொல்லி வரும் நிலையில்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி அவர்கள் அனைத்து தியாகிகள் குடும்பங்களுக்கும் வீடு கட்டிக் கொடுப்பதாக அறிவித்தார்.
2026 இன்று வரை அதை செய்யாமல் இருந்தார். 2014 இலிருந்து தொடர்ந்து திரு அன்புமணி அவர்களுக்கு நாம் இதை செய்ய சொல்லிஅவரை எதிர்த்து குரல் கொடுத்து வந்தோம்.
இன்று அந்த 25 தியாகிகள் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுப்பதற்காக அன்புமணி அவர்கள் அறிவிப்பு செய்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
"இடிப்பார் இடித்தால் கல்லும் கரையும்"
என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் கேள்வி கேட்டால் மட்டுமே நம் உரிமைகள் நமக்கு கிடைக்கப்படும்.
வன்னியர் சங்க மகளிர் அணி செயலாளராக செயல்பட்ட அம்மா நவமணி அவர்கள் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த திரு. அன்புமணி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்தது, 200 லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்து வாரியம் செயல்பட முயற்சி எடுங்கள். நன்றி.
#இடஒதுக்கீட்டுதியாகிகள் #வன்னியர்புரட்சிநாள் #செப்டம்பர்17
17/09/2026
#ஆழ்ந்தஇரங்கல்
முன்னாள் வன்னியர் சங்க மகளிரணி செயலாளர் அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று மாலை சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
செப்டம்பர் 17ஆம் தேதி இடஒதுக்கீட்டு தியாகிகள் இறந்த அதே நாளில் அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் இறந்தார்.
இந்த வன்னிய சமுதாயத்துக்காக அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் ஆற்றிய சமுதாய தொண்டுகள் ஏராளம்.
1980 களில் வன்னியர் சங்க மாநில மகளிர் அணிச் செயலாளராக திறம்பட செயலாற்றி பூம்புகாரில் மகளிர் அணி மாநாட்டை திறம்பட வெற்றிகரமாக செய்துகாட்டிய வீரப்பெண்மணி அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள்.
மிகவும் செல்வந்தராக இருந்த அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் 1980களில் 20% இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற அனைத்து போராட்டங்களும் மாநாடுகளுக்கும் தாராளுமான நிதியை செலவு செய்தவர்.
1980 களில் நடைபெற்ற போராட்டங்களான,
1) பட்டை நாமம் தரித்து பட்டினி போராட்டம்
2) எம்ஜிஆர் அவர்களுக்கெதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
3) இரயில் மறியல் போராட்டம்
4) ஒரு நாள் சாலை மறியல் போராட்டம்
5) ஏழு நாள் சாலை மறியல் போராட்டம்
6) தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
7) வன்னிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட குண்டாசுக்கு எதிரான போராட்டம்
8) 20% இட ஒதுக்கீடு கேட்டு நடந்த அனைத்து போராட்டம்
9) 10.5% உள் ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம்
10) செய்யூரில் அனல் மின் நிலையம் அமையப் போராட்டம்
11) கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைய போராட்டம்
வன்னிய சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் வன்னிய சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்திற்காகவும் தன்னிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் செலவு செய்து இழந்தவர்.
அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் இறப்பு வன்னிய சமுதாயத்துக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
16/09/2026
இதுநாள்வரை யாரும் இராமதாசின் அடக்குமுறைக்கு பயந்து அவரின் திருட்டுத்தனத்தை யாரும் எதிர்த்தில்லை. எதிர்த்தவர்கள் கூட இப்போது அவருக்கு கட்டுபட்டு ஒன்றிணைந்துவிட்டார்கள்.
எத்தனையோ வன்னிய தலைவர்களை அடியாட்கள் வைத்து அடித்து அரசியலில் காணாமல் போகச் செய்த இராமதாசால் ஒரேயொரு வன்னிய தலைவரை மட்டும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள் மீது 29 முறை கொலை முயற்சி செய்துபார்த்தார். 29 கொலை முயற்சி வழக்கு இராமதாசுக்கு எதிராக பதிவு செய்தவர் ஐயா சி.என்.ஆர்.
பல லட்சம்கோடி மதிப்புடைய வன்னிய சொத்துக்களை ஆட்டைய போட நினைத்து அபகாரித்து தன் குடும்ப பெயரில் எழுதி வைத்த இராமதாசு மற்றும் அன்புமணி இவர்களால் முழுவதுமாக அந்த அறக்கட்டளைகளை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவைக்க முயல்கிறார்கள்.
ஆனால் அதை சட்டப்படி தடுத்துநிறுத்தியவர் ஐயா சிஎன்ஆர். அந்த அறக்கட்டளைகள் எல்லாம் இந்த வன்னியர் சமுதாய மக்களுக்கு போய் சேர வேண்டியது. இவர்களுக்கு அல்ல.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அறக்கட்டளைகளும் தமிழக அரசு பயன்படுத்தும் அறக்கட்டளைகளும் இந்த 44-வது சட்டத்தால் பாதுகாக்கப்பட்டன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறக்கட்டளைகளும் சரி அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அறக்கட்டளைகளும் சரி இனி வன்னியர் பொதுசொத்து வாரியத்தால் மட்டுமே செயல்படுத்த வேண்டும். ஆளுங்கட்சிகள் செயல்படுத்தாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக ஒரு நாள் கண்டிப்பாக வன்னிய சமுதாய மக்கள் எழுச்சியால் செயல்படுத்தப்படும்.
வன்னியர் சமுதாயத்திற்கு முன்னோர்கள் விட்டுச் சென்ற பல லட்சம் கோடி மதிப்புடைய வன்னிய அறக்கட்டளைகளை எல்லாம் ஒன்றிணைத்து வன்னியர் பொதுச்சொத்து வாரியம் அமைக்க 2010ல் வழக்கு தொடுத்து 2012 நீதிமன்ற ஆணை பெற்று 2018 இல் 44 வது சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று உருவாக்கி தந்து பாதுகாத்தவர் ஐயா சி. என்.இராமமூர்த்தி அவர்கள்.
ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள் இந்த அபகரிக்கப்பட்ட வன்னிய சொத்துக்களை எல்லாம் பாதுகாத்து சட்டப்படி கொடுக்கத் தான் முடியும்.
200 லட்சம்கோடி மதிப்புடைய இந்த அறக்கட்டளைகள் எல்லாவற்றின் வருமானத்தை ஆக்கப்பூர்வமாக இந்த வன்னிய சமுதாயத்திற்கு செயல்படுத்தி முன்னேற வேண்டியது உங்கள் கடமை. அதை நீங்கள் செய்வீர்களா அல்லது வேடிக்கை பார்ப்பீர்களா என்பது உங்கள் கையில்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த சமுதாய முன்னேற ஒவ்வொரு உண்மையான போராளிகள் வந்து போராடிவிட்டு போவதும் அதை இந்த சமுதாய மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்வதும்தான் நடக்கிறது.
உண்மையான ஒரு இன உணர்வு இந்த சமுதாய மக்களுக்கு எப்போது வருமோ அப்போதுதான் இந்த சமுதாயத்தின் முன்னேற்றம் காணப்படும்.
அதுவரை திருடர்களுக்கு முட்டுக் கொடுத்து இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருங்கள்.
15/09/2026
இதவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் அதிமுக மற்றும் திமுக என இரண்டே கட்சிகள் இருந்தது.
அதனால் 2026வரை அதிமுக மற்றும் திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்தார்கள்.
இப்போது இந்த இரண்டு கட்சிகளும் அடுத்த 15வருடத்திற்கு ஆட்சிக்கு வருவது சந்தேகமாக கருதுகிறார்கள் பாமக தலைமை.
அதனால் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமலும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்காமலும் விலகிச் சென்றால் மட்டுமே அடுத்த தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க முடியும் என்று அன்புமணியும் சௌமியா அவர்களும் தீர்மணித்ததின் விளைவு தான் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காததின் காரணம்.
அபகரித்து தன் குடும்ப பெயரில் எழுதி வைத்துள்ள பல லட்சம்கோடி மதிப்புடைய வன்னிய அறக்கட்டளைகளை வன்னியர் பொதுச்சொத்துவாரியம் எடுக்காமல் பாதுகாக்கவேண்டுமல்லவா?
அதுக்குத்தான் இந்த அரசியல் நகர்வே?
எப்பவுமே எதைப்பற்றியும் கவலைபடாமல் நாம முட்டாளாவே இருப்போம். அடுத்த தலைமுறை என்னான நமக்கு என்ன.
#வன்னியர் #வன்னியர்பொதுச்சொத்துவாரியம்
Category
Website
Address
Chennai
600003
Alerts
Be the first to know and let us send you an email when Kshatriyas - The Ruler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.