Thondamuthur Ravi
மாவட்ட கழக செயலாளர்
கோவை வடக்கு மாவட்ட திமுக
18/06/2026
கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய மாவட்ட பிரதிநிதியும் பேரூராட்சி மாமன்ற உறுப்பினர், நந்து (எ) R. விஜயகுமார், அவர்களின் மகன் சுபாஷ் அரவிந்தன் - சஞ்சனா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது..
உடன் கோவை பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய கணபதி ராஜ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி பி சுப்பிரமணியம், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புக்கள் பலர் உடனிருந்தனர்..
18/06/2026
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம், கொண்டையம்பாளையம் கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணனின் தகப்பனாருமான முன்னாள் கிளை செயலாளர் - BLA2 ஆக பணியாற்றிய கழகத்தின் மூத்த முன்னோடி CTC பழனிச்சாமி அவர்கள் மறைவையொட்டி, இன்று இல்லத்திற்கு நேரில் சென்று அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது..
உடன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, மாணவரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் உடனிருந்தனர்...
18/06/2026
கோவை வடக்கு மாவட்டம்,
கோவைபுதூர் பகுதி கழகத்தை சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்...
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அனுகீர்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்..
கழக நிர்வாகிகளுடன் சென்று மறைந்த மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..
உடன் பகுதி செயலாளர் முரளி, துணை மேயர் வெற்றிச்செல்வன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, மாணவரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், வட்ட செயலாளர் ஜீவானந்தம், கீர்த்தி ராமன், ஜாபர், நிர்வாகிகள் நவீன்குமார், மாணவரணி சுதன், முத்துக்குமார், கஜினி, கரும்புகடை சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்..
17/06/2026
தொ.மு.ச கோவை மண்டல செயலாளர் டி.என்.சி.எஸ்.சி. எம்ப்ளாயீஸ் யூனியன் திரு. கோ.ராதாகிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது...
உடன் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன், தொ.மு.ச நிர்வாகிகள் உள்ளிட்ட உடன்பிறப்புகள் பலர் உடனிருந்தனர்...
17/06/2026
கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜயா பவுண்டரி மணி அண்ணன் அவர்களின் மருமகன் யோகேஷ் மறைவையொட்டி இன்று இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது...
17/06/2026
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, கரும்புக்கடை பகுதி கழக செயலாளர் எஸ்.ஜெய்லாப்தீன் இல்ல திருமண விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய K Eswarasamy MP அவர்களுடன் இணைந்து இளைஞரணி தம்பி திரு.சஜின் - தவ்பியா மணமக்களை வாழ்த்திய போது.
உடன் பகுதி செயலாளர்கள் ஜெய்லாப்தீன், ராஜ்குமார்,
காரமடை வடக்கு ஒன்றிய செயலாளர் SMT.கல்யாணசுந்தரம்,
வட்ட செயலாளர்கள், பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் உள்ளிட்ட கலைஞரின் அன்பு உடன்பிறப்புக்கள் பலர் கலந்து கொண்டனர்...
17/06/2026
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் மத்திய - மாநில அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான ஐயா மு.கண்ணப்பன் அவர்களை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய K Eswarasamy MP அவர்களுடன் இணைந்து ஐயா அவர்களை வாழ்த்தி வணங்கிய தருணம்...
உடன் கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு, ஒன்றிய செயலாளர் செட்டிக்காபாளையம் துரை, கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
17/06/2026
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் பூசாரி சௌந்தர்ராஜன் அவர்களின் தகப்பனார் - தாயார் திரு.S.கோவிந்தராஜ் திருமதி.G.பூங்கொடி அம்மாள் தம்பதிக்கு (அறுபதாம் அகவை வழிபாடு) விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்த போது...
உடன் தொண்டாமுத்தூர் பேரூர் கழக செயலாளர் T.V.குமார் உடனிருந்தார்.
17/06/2026
கோவை வடக்கு மாவட்டம்,
தொண்டாமுத்தூரில் ஜனாஷா தமிழ்நாடு நிதி லிமிடெட் புதியதாக கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த போது...
17/06/2026
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் புதியதாக செய்யப்பட்டு வரும் தேருக்கு நடைபெற்று வரும் முதல் பூஜையில் கலந்து கொண்ட போது..
உடன் பேரூர் கழக செயலாளர் T.V.குமார், பேரூராட்சி மன்ற தலைவர் கமலம் ரவி, கவுன்சிலர் தியாகு,ஸ்கைலப்,
நிர்வாகிகள் கணேசன், சேகர், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உடனிருந்தனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Vaikaal Vali Road, Thondamuthur
Coimbatore
641109