importmirror.com
24/7 செய்திச்சேவை
www.importmirror.com Tamil Online news Website From Srilanka | as a Register under the Srilanka Government
அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக முகம்மது புசைலுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கௌரவம்!
07/08/2026
மெகசின், குருவிட்ட, பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், ஏனைய முக்கிய சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குருவிட்டில் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளில் இதேபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை; அங்கு பாதுகாப்பு மற்றும் பதற்ற நிலை தொடர்பான தகவல்களே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
07/08/2026
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்: 2 கைதிகள் பலி – 4 பேர் காயம்
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) காலை கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று காலை மீண்டும் கைதிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
07/08/2026
🛑மெட்ரோ பேருந்து வழித்தடப் பலகைகளில் மூன்று மொழிகளும் கட்டாயமாக்கப்பட வேண்டும்!
🖊️சிங்களம் மட்டும் போதாது – தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கும் சம இடம் வழங்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை
கொழும்பு:
🖊️இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைகளின் வழித்தடப் பலகைகள் மற்றும் பயணிகளுக்கான முக்கிய தகவல்கள் சிங்கள மொழியில் மட்டும் காணப்படுவது தொடர்பில் பயணிகள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
🖊️ அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் உதாசீனம் செய்வதாக இருக்கக் கூடாது. அரசினுடைய திட்டங்களை நிர்வாக அதிகாரிகளாக இருப்பவர்கள் சரியான மேற்பார்வையின் கீழ் சரியாக செய்ய வேண்டும் என்பதுதான் மக்களினுடைய கோரிக்கை.
🖊️சிங்கள மொழி தெரியாத வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் பேசும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான சரியான பேருந்தை அடையாளம் காண்பதில் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
🖊️இலங்கையின் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்றாகும். எனவே, அனைத்து மக்களும் சமமாகப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து சேவைகளில் தமிழ் மொழிக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
🖊️அதேவேளை, இலங்கை ஒரு முக்கிய சுற்றுலா நாடாக வளர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பயணிகளின் வசதியையும் கருத்தில் கொண்டு, பேருந்துகளின் வழித்தடங்கள், இலக்குகள் மற்றும் முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🖊️மூன்று மொழிகளிலும் தகவல்கள் இடம்பெறுவது எந்தவொரு மொழியினருக்கும் எதிரான கோரிக்கையல்ல. மாறாக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கும் சமமான, தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாகும்.
🖊️ஒரு பயணி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு, தனக்குத் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வழித்தடப் பலகையை பார்த்து குழப்பமடைய வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
🖊️“எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் – இலங்கையின் பொதுப் போக்குவரத்து அவருக்கும் சொந்தமானது” என்ற அடிப்படையில், மெட்ரோ பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் மூன்று மொழிக் கொள்கை நடைமுறையில் உறுதியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
🖊️சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழித்தடப் பலகைகள் மற்றும் பயணிகளுக்கான தகவல்களை வழங்குவதன் மூலம், மொழி தடையின்றி அனைவரும் பொதுப் போக்குவரத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முடியும்.
🖊️இதற்கான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
🇱🇰 மூன்று மொழிகள் – ஒரே சேவை – அனைவருக்கும் சம உரிமை! 🚌
#தமிழ் #சிங்களம் #ஆங்கிலம் #மூன்றுமொழி #பொதுபோக்குவரத்து #சமஉரிமை
07/08/2026
> தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பாதுகாப்புக்கு முன்னுரிமை: சம்மாந்துறையில் துரிதமாகும் வீதி அபிவிருத்திப் பணிகள்!
*வீதி அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரிகளுடன் தவிசாளர் மாஹிர் கலந்துரையாடல்*
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிருடன் கலந்துரையாடினார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் பார்வையிடப்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதசாரிகளின் வசதியைக் கருத்திற்கொண்டு நடபாதையை மேலும் விஸ்தரித்தல். மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காகத் தனியான பாதையொன்றை அமைத்தல். ஹிஜ்றா சந்தி சுற்றுவட்டப் பகுதியை நவீன முறையில் அபிவிருத்தி செய்தல். ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரையிலான வீதியை நான்கு வழிப்பாதையாக அமைத்தல் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு இந்த அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு தவிசாளர் மாஹிர் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
06/08/2026
ஹோர்முஸ் நீரிணை வழியாக
அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை!
டெஹ்ரான் | 06 ஆகஸ்ட் 2026
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா கடல் போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
இந்த வரைவு மசோதாவின்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் “விரோத நாடுகள்” எனக் குறிப்பிடும் நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மேலும், இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து சரக்குகளின் போக்குவரத்தையும் தடை செய்யும் வகையிலும் இதில் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, ஈரான் ஆதரவு “Axis of Resistance” அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டதாகக் கருதப்படும் கப்பல்கள் மற்றும் அவற்றின் சரக்குகளுக்கும் அனுமதி மறுக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் உரிய இழப்பீட்டை வழங்கும் வரை, அவர்களுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு பயண அனுமதி வழங்கப்படாது என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கு, சரக்கின் மொத்த மதிப்பில் 20 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கடல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பொறுப்புகள் ஈரான் அரசு மற்றும் ஆயுதப்படைகளின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் குறிப்பிடத்தக்க பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால் சர்வதேச கடல் போக்குவரத்து, எண்ணெய் சந்தை மற்றும் உலக வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு: இந்த முன்மொழிவு தற்போது வரைவு மசோதா மட்டுமே. இது இன்னும் இறுதி சட்டமாக நிறைவேற்றப்படவில்லை; ஈரான் நாடாளுமன்றத்தின் மேலதிக பரிசீலனை மற்றும் அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது.
பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு!
முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்
பாறுக் ஷிஹான்-
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்-
06/08/2026
கலைமகளில் கலக்கிய மாணவர் பாராளுமன்ற அமர்வு
( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் நேற்று முன்தினம் ( 4) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் பாராளுமன்ற அமர்வு போன்று திட்டமிட்டு சபாநாயகர், பிரதமர் அமைச்சுக்கள் தெரிவுசெய்யப்பட்டு குழுவிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் எம்.ஏ.அஸ்கர், ஆசிரியர் ஆலோசகர் எம் எச் கபீர் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முன்னதாக அதிதிகள் வரவேற்கப்பட்டு முறைப்படி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமாகி வாதப் பிரதி வாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
அதிதிகள் பின்தங்கிய பிரதேசத்தில் இவ்வாறான சிறப்பு நிகழ்வை நடாத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் என வாழ்த்தி பேசினர்.
06/08/2026
சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டுக் அழிப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் அதிரடிச் சுகாதாரப் பரிசோதனையை முன்னெடுத்தனர்.
இப்பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட சில வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், சந்தைப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்குச் சுகாதார விதிமுறைகள், உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியச் சுகாதார ஆலோசனைகளும் அதிகாரிகளால் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Addalaichenai
Ampara
32350.