Astro Bakeera
Astronomy content creator
🪐சனிக் கிரகம் மற்றும் அதன் மிகப்பெரிய துணைக்கோள் – Titan!
இது என் தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்ட சனிக் கிரகத்தின் சிறிய வீடியோமற்றும் stacked image.
நீங்கள் கவனமாக பார்த்தால், சனியின் அருகில் ஒரு சிறிய ஒளிப்புள்ளி தெரியும். அதுதான் Titan – சனியின் மிகப்பெரிய துணைக்கோள்!
Titan, நமது சூரியக் குடும்பத்தில் அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்ட ஒரே துணைக்கோள். அதன் மேற்பரப்பில் திரவ மீத்தேன் மற்றும் எதேன் ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 1.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிரகத்தையும், அதன் துணைக்கோளையும் ஒரே காட்சியில் பதிவு செய்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.
இது நமது சூரியக் குடும்பத்தின் மிக அழகான கோள்களில் ஒன்றான சனிக் கிரகம்
இரவு வானில் ஒரு சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரியும் இந்தக் கிரகம், தொலைநோக்கி வழியாக பார்க்கும்போது அதன் அழகிய வளையங்களுடன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
இது என் தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்ட சனிக் கிரகத்தின் ஒரு சிறிய காணொளி.
இதுதான் வெள்ளிக் கிரகம் (Venus)!
நமது கண்களுக்கு இது ஒரு சாதாரண பிரகாசமான நட்சத்திரம் போலவே தெரியும்.
ஆனால்...
ஒரு தொலைநோக்கி (Telescope) மூலம் பார்த்தால், அதன் உண்மையான தோற்றம் வெளிப்படும்.
நிலாவைப் போலவே, வெள்ளிக் கிரகமும் பல நேரங்களில் பிறை வடிவத்தில் காணப்படும்.
📸 இந்தப் படம் என் தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்டதாகும்.
நாம் கண்களால் பார்க்கும் ஒரு சிறிய ஒளிப்புள்ளிக்குள், இவ்வளவு அழகான ஒரு உலகம் மறைந்திருக்கிறது என்பதே விண்வெளியின் அதிசயம்!
09/06/2026
Today 😄
05/06/2026
🌍
நம்மைப் போன்ற ஒரு உலகத்தைத் தேடும் மனிதகுலத்தின் பயணம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பூமியைப் போன்ற சில அற்புதமான உலகங்கள்:
🔹 Proxima Centauri B
📍 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நமக்கு மிக அருகிலுள்ள exoplanet.
🌍 Earth Similarity Index (ESI): 0.87 ( எந்த அளவுக்கு பூமியோடு ஒத்துப் போகிறது என்ற குறியீடு )
💧 Habitable Zone-ல் உள்ளது. ( உயிர் வாழக்கூடிய மண்டலம் )
🌗 Tidally Locked ஆனாலும், திரவ நீர் இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.
Tidally Locked என்பது ஒரு கோளோ அல்லது உப கோளோ அது தன்னைத் தானே சுற்றுவதற்கும் அது சுற்றிவரும் நட்சத்திரம் அல்லது கோளை சுற்றுவதற்கு எடுக்கும் காலம் ஒரே அளவாய் இருப்பது . நமது சந்திரன் பூமியுடன் Tidally Locked , அதனால்தான் நாம் எப்போதும் அதன் ஒரே பக்கத்தைப் பார்க்கிறோம். கோள்கள் அதன் நட்சத்திரத்துடன் Tidally Locked ஆக இருந்தால் எப்போதும் அதன் ஒரே பக்கத்த்துக்கே சூரிய ஒளி கிடைக்கும்
🔹 Teegarden B
📍 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
🌍 ESI: 0.95 — இதுவரை பதிவான மிக அதிக அளவு
💧 மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியம் 60%.
பூமியின் உண்மையான விண்வெளி சகோதரன் என்று சொல்லலாம்.
🔹 TRAPPIST-1e
📍 39 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
🌍 ESI: 0.85
🌌 ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 3 வாழத்தகுந்த கோள்கள் கொண்ட அமைப்பின் ஒரு பகுதி.
💧 திரவ நீர் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.
🔹 Kepler-442b
📍 1,200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
🌍 ESI: 0.84
🪨 பூமியை விட சற்று பெரிய கற்கோள்.
☀️ பூமியை விட 33% அதிக சூரிய ஒளியைப் பெறுகிறது. ( அதாவது அது சுற்றிவரும் நட்சத்திரம் )
🔹 Kepler-452b
📍 1,400 ஒளியாண்டுகள் தொலைவில்
🌍 ESI: 0.83
☀️ பூமியை விட 5% அதிக சூரிய ஒளியைப் பெறுகிறது.
📅 ஒரு வருடம் = 385 நாட்கள்.
பூமியின் பெரியண்ணா மாதிரி
இதுவரை 5,500-க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், நமது பால்வீதியின் வெறும் 0.001% பகுதியை மட்டுமே நாம் ஆராய்ந்துள்ளோம்!
அதாவது, இன்னும் மில்லியன் கணக்கில், அல்லது பில்லியன் கணக்கில் கூடபூமியைப் போன்ற உலகங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றில் இப்போதே உயிர்கள் இருக்கக்கூடும்.
இவையொன்றும் அறிவியல் புனைகதைகள் அல்ல.
🌍 இவை உண்மையான உலகங்கள்.
🌌 உண்மையான கோள்கள்.
நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாள் இல்லை என்பதை நான் நம்புகிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
🚀🔥 Blue Origin-ன் New Glenn rocket launch pad-ல வெடித்தது!
வியாழக்கிழமை மாலை,
Blue Origin நிறுவனத்தின் New Glenn rocket, launch pad-இல் இருந்தபோதே வெடித்து சிதறியது 💥
🔥 இந்த வெடிப்பு மிகப்பெரிய fireball ஐ உருவாக்கியது அருகிலிருந்த வீடுகள் கூட அதிர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சில நிமிடங்களுக்கு,
வானம் முழுவதும் orange நிறத்தில் ஒளிர்ந்தது
🚀 New Glenn என்பது Blue Origin-ன் powerful heavy-lift rocket ஆகும்,
இது எதிர்கால satellite launches மற்றும் deep space missions-க்காக உருவாக்கப்பட்டது.
Category
Address
Colombo