Vikadam.com

Vikadam.com

Share

சிரிக்க வைப்பது தான் முதல் நோக்கம்..
சிந்திப்பது உங்கள் கையிலும் மனதிலும் உள்ளது !

Collection of Cartoons.

விகடம் - சிந்தித்து சிரிப்போம் ; சிரிப்பில் சிந்திப்போம்.

உலகளாவிய கேலிச் சித்திரங்களின் தொகுப்பு

http://vikadam.com/

08/06/2026

ஒரு நீதிமன்ற குட்டி கதை - நீதி டா ! நேர்மை டா ! நியாயம் டா !

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

08/06/2026

அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான்.

"டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்" னு கேட்டான்.

அதுக்கு அந்த டென்டிஸ்ட் "1200 டாலர் ஆகும்" என்றார்.

அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு.

கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட "டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"ன்னு கேட்டான்.

"ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். 300$ டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்" என்றார்.

நம்மாளு, "பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்றான்.

டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்: "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி.. எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்" என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார்.

"நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான். அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான். அந்த ராஸ்கல் தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !" என்று நாக்கை துருத்தினார் !......

03/06/2026

அண்ணன் இல்லடா, அந்நியன் டா !

02/06/2026

நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

02/06/2026

ஓட்டை 😳🤦🏻‍♂️

01/06/2026

வாடிக்கையாளர்:இந்தச் சாப்பாட்டுல உப்பே இல்லப்பா!

சர்வர்:சார், டாக்டர் உப்பைக் குறைச்சுச் சாப்பிடச் சொன்னார்னு நீங்கதானே நேத்து இங்க வந்தப்ப சொன்னீங்க. உங்க ஆரோக்கியத்துல எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன?

----------

வாடிக்கையாளர்:யோவ் சர்வர்! நான் ஆர்டர் பண்ணி ஒரு மணி நேரம் ஆகுது. ஆனா, நீ இப்படியே வேகமா ஓடிக்கிட்டு இருந்தா எப்ப சாப்பாடு வரும்?

சர்வர்:சார், நான் சாப்பாடு கொண்டு வர ஓடல... நீங்க கோபத்துல அடிச்சிடுவீங்களோனு பயந்து ஓடிக்கிட்டு இருக்கேன்!

01/06/2026

தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

01/06/2026

என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?

இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

01/06/2026

இவனுக திருந்தவே போறதில்ல !

RCBயின் IPL வெற்றிக்குப் பின்னர் கர்நாடகா, பெங்களூருவில் காட்சிகள் !

டீம் சாம்பியன் ஆனா மட்டும் போதுமா? ரசிகர்களுக்கு கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி வேண்டாமா ?

01/06/2026

அடப்பாவிகளா..
அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் ?

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address


Colombo