The Authentic Message - T.A.M
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Authentic Message - T.A.M, Religious organisation, 83, Maligawaththa Place, Colombo.
இது The Authentic Message இன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமாகும்.
இஸ்லாத்தின் சத்திய கொள்கையை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பதே எமது ஒரே இலக்கு!
குர்ஆனும், அதற்து வழிக்காட்டியாக வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய ஸுன்னா மட்டுமே எமது சத்திய செய்தி!
04/08/2025
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
Follow our official WhatsApp Channel to know Islam in its purest form! https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
ඉස්ලාම් දහම එහි පිරිසිදු ස්වරූපයෙන් සිංහලෙන් දැන ගැනීමට අපගේ නිල WhatsApp කණ්ඩායමට සම්බන්ධ වන්න! https://chat.whatsapp.com/GlVJTVBsQzLBea09GUNqHz
අපගේ නිල WhatsApp නාලිකාව සමග සම්බන්ධ වන්න. https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
29/05/2025
#வஹியின்_ஒளியில்_குர்பானியின்_சட்டங்கள் 03
• குர்பானிப் பிராணிகள்
ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
ஆடு என்பதில் வெள்ளாடு, செம்மறி ஆடு இன்னும் பலவகைகள் அடங்கும்.
மாடு என்பதில் நாட்டு மாடு, எருமை மாடு உள்ளிட்ட அதன் அனைத்து வகைகளும் அடங்கும்.
ஒட்டகம் என்பதில் ஒட்டகத்தின் அனைத்து வகைகளும் அடங்கும்.
இம்மூன்று இனத்தில் அடங்கும் அனைத்தையும் குர்பானி கொடுக்கலாம்.
அகீகா, குர்பானி ஆகிய வணக்கங்களுக்குத் தான் ஆடு மாடு ஒட்டக்கங்களை மட்டும் கொடுக்க வேண்டும்.
இது அல்லாமல் நன்மையை நாடி நாமாக அறுத்துப் பலியிட நினைத்தால் கோழி சேவல் உள்ளிட்ட எதனையும் குர்பானியாக கொடுக்கலாம்.
ஒரு காரியம் நிறைவேறினால் ஒரு முயலை அறுத்து அல்லது கோழியை அறுத்து தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.
صحيح البخاري
881 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الخَامِسَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ المَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»
ஜும்ஆவுக்கு முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வருபவர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வருபவர் கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வருபவர் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 881
• பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணிகள் பெரிய குறைகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
سنن الترمذي ت شاكر (4/ 85)
1497 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ [ص:86] عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: «لَا يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلَا بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلَا بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلَا بِالعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِي»
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
பளிச்சென்று தெரியும் குறைகளைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்தால் குற்றமில்லை என்பதை இது உள்ளடக்கி இருக்கிறது.
கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3637)
உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
கொம்புகளில் மேல் ஓடும், உள் பகுதியும் உடைந்து இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கக் கூடாது. கொம்பின் மேல் ஓடு மட்டும் உடைந்து உட்புறம் உடையாமல் இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கலாம்.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் குர்பானி கொடுப்பதில்லை. இது கூடாது என்று கருதுகிறார்கள். பெண் பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாக உள்ளது.
(பலிப் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்! என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா? என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 143)
பெண் பிராணிகளை அறுத்து உண்பதை அல்லாஹ் ஹராமாக ஆக்கவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது. உணவாக உண்பதில் ஆண் பிராணியும் பெண் பிராணியும் சமமானவை என்பதால் பெண் பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.
பெண் பிராணிகள் கருவுற்று இருந்தால் அவற்றின் குட்டிகளை உண்பதை அல்லாஹ் ஹராமாக ஆக்கவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.எனவே கருவுற்ற பிராணிகளை அறுத்து உண்ணலாம். குர்பானியும் கொடுக்கலாம் என்பதும் இவ்வசனத்தின் மூலம் தெரிகிறது.
குர்பானிப் பிராணிகளுக்குப் போதுமான உணவளித்து பராமரிக்க வேண்டும்.
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா
• ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி
காயடிக்கப்பட்ட பிராணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.
• பிராணியின் வயது
குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல் விழுந்திருக்க வேண்டும். பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடக் கூடாது. குர்பானிப் பிராணிகள் எத்தனை வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்து நாம் அறியலாம்.
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (3634)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸயீ (4306)
பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆடு, மாடு, ஒட்டகத்தில் பல் விழுந்தவை முஸின்னா என்று சொல்லப்படும்.
இரண்டு வருடம் பூர்த்தியான ஆடு, மாடுகள் முஸின்னா எனப்படும். ஆனால் ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்தால் தான் முஸின்னா என்பர். பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இது இடம் பெற்றுள்ளது.
அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஜத்வு என்பது ஆறு மாதம் பூர்த்தியடைந்தவை என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்தவை என்றும் கூறப்படுகிறது.
முஸின்னா கிடைக்கவில்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.
• பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒரு அன்சாரித் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (3799)
இன்ஷா அல்லாஹ், தொடரும்...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
28/05/2025
#இறுதித்_தூதரின்_இறுதிப்_பேருரை 03
சகோதரத்துவம்
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரனாவான்
ஹாகிம்:- 1/318
அறிந்து கொள்ளுங்கள் எனக்கு பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.
புஹாரி :- 4406
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:10
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
27/05/2025
#வஹியின்_ஒளியில்_குர்பானியின்_சட்டங்கள் 02
• யார் மீது கடமை?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா பின் நியார் (ரலி) அல்லாஹ்வின் தூதரே இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாக உட்கொண்டு விட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன் ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத் தான் கருதப்படும் என்று கூறினார்கள். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது போதுமா? என்று கேட்டார். ஆம் இனிமேல் உன்னைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர் : பராஃ (ரலி)
நூல் : புகாரி (955)
தவறாக குர்பானி கொடுக்கப்பட்டால் மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
صحيح البخاري
954 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ، فَلْيُعِدْ»، فَقَامَ رَجُلٌ فَقَالَ: هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ، وَذَكَرَ مِنْ جِيرَانِهِ، فَكَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَّقَهُ، قَالَ: وَعِنْدِي جَذَعَةٌ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْ لَحْمٍ، فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لاَ
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறாரோ அவர் திரும்பவும் அறுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 954
صحيح البخاري
5500 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ البَجَلِيِّ، قَالَ: ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُضْحِيَةً ذَاتَ يَوْمٍ، فَإِذَا أُنَاسٌ قَدْ ذَبَحُوا ضَحَايَاهُمْ قَبْلَ الصَّلاَةِ، فَلَمَّا انْصَرَفَ، رَآهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ ذَبَحُوا قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ»
ஒரு (ஹஜ்ஜுப்) பெருநாளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும் வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)
நூல் : புகாரி 5500
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திலும், ஊரில் இருக்கும் போதும் குர்பானி கொடுத்துள்ளார்கள்.
صحيح مسلم
35 - (1975) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ ثَوْبَانَ، قَالَ: ذَبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِيَّتَهُ، ثُمَّ قَالَ: «يَا ثَوْبَانُ، أَصْلِحْ لَحْمَ هَذِهِ»، فَلَمْ أَزَلْ أُطْعِمُهُ مِنْهَا حَتَّى قَدِمَ الْمَدِينَةَ،
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு இதன் இறைச்சியைப் பக்குவப்படுத்துவீராக என்று என்னிடம் கூறினார்கள். அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
நூல் : முஸ்லிம் 3649
صحيح البخاري
5554 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ، فَذَبَحَهُمَا بِيَدِهِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.
அறவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 5554
صحيح البخاري
951 - حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ : أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ البَرَاءِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا»
நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர் பராஃ (ரலி)
நூல் புகாரி (951)
(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
திருக்குர்ஆன் 108 : 1,2)
• குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை!
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது.
صحيح مسلم
39 - (1977) حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يُحَدِّثُ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَتِ الْعَشْرُ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلَا يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا»، قِيلَ لِسُفْيَانَ: فَإِنَّ بَعْضَهُمْ لَا يَرْفَعُهُ، قَالَ: «لَكِنِّي أَرْفَعُهُ»
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : முஸ்லிம் 3655
துல்ஹஜ் மாதம் ஆரம்பத்தில் குர்பானி கொடுக்கும் வசதியைப் பெறாதவர் ஓரிரு நாட்கள் கழித்து வசதியைப் பெற்றுக் கொண்டால் அப்போது முதல் குர்பானி கொடுக்கும் வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நகம் முடி ஆகியவை விழுவது நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் அது நம்மை பாதிக்காது.
நகம், தலைமுடியை வெட்டும் அவசியம் அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் ஏற்பட்டால் அப்போது இவற்றை அகற்றுவதும் குற்றமாகாது.
ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு மீறும் வகையில் கஷ்டம் கொடுப்பதில்லை.
குர்பானி கொடுப்பவர் தான் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
மேற்கண்ட ஹதீஸில் குர்பானி கொடுப்பவர் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
22/05/2025
#இறுதித்_தூதரின்_இறுதிப்_பேருரை 02
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, 'இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர். உடனே அவர்கள் 'இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்க மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர்.
உடனே அவர்கள் '(இது) புனித மிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?' என்றதும் மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் '(இது) புனிதமிக்க மாதமாகும்!' எனக் கூறிவிட்டு, 'உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!' எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, 'இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!' எனக் கூறினார்கள். மேலும், 'இறைவா! நீயே சாட்சி!' என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் 'இது நபி(ஸல்) அவர்கள் (நம்மிடம்) விடை பெற்று (உலகைவிட்டு)ச் செல்கிற ஹஜ்ஜாகும்!' எனப் பேசிக் கொண்டார்கள்.'
ஸஹீஹ் புகாரி : 1742.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
இறையச்சம் என்பது ஈது வரையா? அல்லது இறுதி வரையா? ᴴᴰ
உரையாற்றுபவர்: அப்துல் ரஹீம் ரமீஸ்
Video@YouTube
https://youtu.be/s7wmMwWVs9c
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
21/05/2025
#வஹியின்_ஒளியில்_குர்பானியின்_சட்டங்கள் 01
• குர்பானியின் பின்னணி!
இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காகப் பலியிட முன்வந்த போது அதற்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு அல்லாஹ் வழிகாட்டினான். அந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் குர்பானியின் பின்னணியாகும்
இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
• குர்பானியின் நோக்கம்
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)
• குர்பானியின் சிறப்பு
صحيح البخاري
5546 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ المُسْلِمِينَ»
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 5546
صحيح البخاري
955 - حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ، فَقَالَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا، وَنَسَكَ نُسُكَنَا، فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ، فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ وَلاَ نُسُكَ لَهُ»، فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ البَرَاءِ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ، وَعَرَفْتُ أَنَّ اليَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ، وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي، فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ، قَالَ: «شَاتُكَ شَاةُ لَحْمٍ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْنِ، أَفَتَجْزِي عَنِّي؟ قَالَ: «نَعَمْ وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி 955
இன்ஷா அல்லாஹ், தொடரும்...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
20/05/2025
#இறுதித்_தூதரின்_இறுதிப்_பேருரை
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரண்டிருந்த நபித்தோழர்கள் முன்பு பேச ஆரம்பிக்கிறார்கள்! அப்போது அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தவாறு பேச ஆரம்பிக்கிறார்கள்:
«الحمد لله نحمده ونستعينه ونستغفره»
(அல்லாஹ்வை புகழ்கிறோம், அவனிடமே உதவியும் மன்னிப்பும் நாடுகிறோம்)
நபி (ஸல்) அவர்கள் இறுதி உரையை ஆரம்பித்ததும், அல்லாஹ்வை புகழ்வதிலிருந்துதான் தொடங்கினார். இது எங்களுக்கு எதை நினைவூட்டுகிறது—முஸ்லிம்களான நாம் எதையும் செய்யும் முன் இறைவனையே முதலிடம் வைக்க வேண்டும். புகழும், நன்றியும், நாடுவதும்—all from Him, to Him.
இது ஏன் முக்கியம்?
இது ஒவ்வொரு உரையிலும், பிரச்சாரத்திலும் நம்மால் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை துவக்கம். இது தான் தூய நியதியின் அடையாளம்.
நூல் ஆதாரம்:
இமாம் அஹ்மதின் முஸ்னத் முஸ்னத் அஹ்மத் 20430
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
13/05/2025
#தினம்_ஒரு_செய்தி
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07
Full Video@YouTube
https://youtu.be/s7wmMwWVs9c?si=EOIfEwXujbg5KbJ-
இறையச்சம் என்பது ஈது வரையா? அல்லது இறுதி வரையா? ᴴᴰ
உரையாற்றுபவர்: அப்துல் ரஹீம் ரமீஸ்
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
83, Maligawaththa Place
Colombo
01000