Ceylon Thawheed Jamath - CTJ

Ceylon Thawheed Jamath - CTJ

Share

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) உத்தியோகபூர்வ பக்கம்.

25/09/2026

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
தலைமையகத்தில்
இன்ஷா அல்லாஹ்,
இந்த வார (25.08.2026)
ஜும்ஆ உரை!

சகோதரர். ஆர். அப்துர் ராஸிக்
M.A. (Sinhala), B.Com. (Special), LLB (UK) (Hons)
Dip. in Psychology & Counseling (Merit)
(தலைவர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

தலைப்பு: அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: ஷரீஅத் பார்வையில் ஓர் ஆய்வு

நேரலையாக எமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் எதிர்பாருங்கள்....

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ
இல. 46, மாளிகாவத்தை வீதி, மாளிகாவத்தை, கொழும்பு 10

தொடர்புகளுக்கு: 0744153881, 0744153882, 0744153883, 0744153884, 0744153885

24/09/2026

🚨 தன்னை ஏசியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை கொடுத்தார்களா? - வரலாற்று நிஜங்கள்! 📖🛑

உரையாற்றுபவர்: அறிஞர். பீ. ஜே

24/09/2026

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைமை நிர்வாகிகள்!

1. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர்
சகோதரர். ஆர். அப்துர் ராஸிக்
தொடர்புகளுக்கு: 0744153881, 0778743777

2. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர்
சகோதரர். ஆர். அப்துர் ரஹீம்
தொடர்புகளுக்கு: 0744153882, 0705013746

3. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின்தேசிய பொருளாளர்
சகோதரர். எப். மொஹம்மட் பஸ்னி
தொடர்புகளுக்கு: 0744153883, 0775511565

4. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துணைத் தலைவர்
சகோதரர். மொஹம்மட் ரிஸ்வான்
தொடர்புகளுக்கு: 0744153884, 0777287750

5. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய துணைப் பொதுச் செயலாளர்
சகோதரர். அப்துல்லாஹ் நஸீர்
தொடர்புகளுக்கு: 0744153885, 0753692512

தேசிய துணைச் செயலாளர்கள்:

6. சகோதரர். எம் எஸ். அப்துல்லாஹ்
தொடர்புகளுக்கு: 0744153886, 0752711130

7. சகோதரர். ரிமாஸ்
தொடர்புகளுக்கு: 0744153887

8. சகோதரர். அல்மாஸ்
தொடர்புகளுக்கு: 0744153888

9. சகோதரர். பிலால்
தொடர்புகளுக்கு: 0744153889

10. சகோதரர். முஇஸ்
தொடர்புகளுக்கு: 0744153890

24/09/2026

💡 உலக வெற்றியா? மறுமையின் நிரந்தர நிம்மதியா? - அல்லாஹ்விடம் மீள்பவனுக்கு அவனே போதுமானவன்! 📖✨

மனிதன் இவ்வுலகில் வாழும்போது உலக ஆதாயங்களுக்கும், தற்காலிக வெற்றிகளுக்குமே முன்னுரிமை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால், நிலையான மரணத்தையும், அதற்குப் பின்னுள்ள மறுமை விசாரணையையும் உறுதியாக நம்பி, தன் வாழ்க்கையை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு அடியானுக்கு அல்லாஹு தஆலா போதுமானவனாக மாறுகிறான்!

Photos from Ceylon Thawheed Jamath - CTJ's post 24/09/2026

ஏகத்துவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கிய பயணத்தில் ஓர் அங்கம்! — CTJ பெண்கள் அணியுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

மார்க்கப் பணிகளிலும் சமுதாயக் கட்டமைப்பிலும் பெண்களின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகும். எமது ஏகத்துவப் பிரச்சாரப் பயணத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) பெண்கள் அணியினருடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் (மசூரா) CTJ இன் தேசிய தலைவரின் தலைமையில் நேற்று (23.09.2026) இரவு 08 மணிக்கு CTJ தலைமையகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

எதிர்காலத் தஃவா திட்டங்கள், பெண்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக நலப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அல்குர்ஆன் சுன்னா காட்டும் வழியில் ஏகத்துவப் பணியை நேர்த்தியாக முன்னெடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!

23/09/2026

🚨 60 ஆண்டுகள் வாழ்ந்தும் திருந்தவில்லையா? - ஆயுளின் பெறுமதியை உணர்த்தும் நபிகளாரின் எச்சரிக்கை! ⏳🔥

மனிதனுக்கு இறைவன் வழங்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் அவன் திருந்தி நற்செயல்கள் புரிவதற்குக் கொடுக்கப்படும் மாபெரும் கால அவகாசமாகும்.

குறிப்பாக, ஒரு மனிதனுக்கு 60 ஆண்டுகள் வரை ஆயுளை நீட்டித்துக் கொடுத்த பிறகும் அவன் தன் வாழ்க்கையை வீணடித்துவிட்டு மறுமையில் வந்து, "இறைவா! எனக்குத் திருந்த போதிய வாய்ப்புத் தரப்படவில்லையே!" என்று சாக்குப்போக்குக் கூற முடியாது.

அவ்வாறு கூறுபவர்களின் சாக்குப்போக்குகளை இறைவன் முற்றாக அடைத்துவிடுகிறான் என்பதை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்!

22/09/2026

உங்கள் பொருளாதாரத்தை எவ்வாறு கையாளுவது?அகஞ்சத்தனமும் இன்றி, விரயமும் இன்றி நடுநிலை பேணுதல்!

ஒரு மனிதனின் பொருளாதாரம் சீரழிவதற்குக் பிரதான காரணம் இரண்டு எல்லைகள்: ஒன்று வீண் விரயம் (இஸ்ராஃப்), மற்றொன்று கஞ்சத்தனம் (புக்ல்). ஆனால், அல்குர்ஆன் அர்ரஹ்மானின் அடியார்களுக்கு இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுநிலையான (சமநிலையான) பாதையை வழிகாட்டுகிறது.

22/09/2026

மறுமையை மறக்கச் செய்யும் உலக வாழ்வின் மாயை!

CTJ தலைமையகத்தின் ஜும்ஆ உரை | 11.09.2026

உரையாற்றுபவர்: சகோதரர். ரிழ்வான் (MISc)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

22/09/2026

🚨 வெறும் வாயளவிலா நமது கலிமா? - 'லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்பதன் உண்மைப் பொருள்! 📖✨

ஒரு மனிதன் இஸ்லாத்திற்குள் நுழையும் அஸ்திவாரமே "லா இலாஹ இல்லல்லாஹ், முஹम्मदுர் ரஸூலுல்லாஹ்" என்ற மேன்மையான சாட்சியம் ஆகும். ஆனால், இன்றைக்குப் பலரும் இவ்வார்த்தையை வெறும் வாயளவில், ஜும்ஆ நாளில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சொல்லக்கூடிய ஒரு சடங்காக மாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

உண்மையில், இந்த கலிமாவைச் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கை நேர்வழி பெறும்.

21/09/2026

கர்கத் மரம் யூதர்களுக்கு ஆதரவான மரமா? அல்குர்ஆனின் வழிகாட்டலுக்கு முற்றிலும் முரண்படும் செய்தி!

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் பாகம் 03

#

Telephone

Address


No. 46, Maligawatta Road, Maligawatta, Colombo/10
Colombo
00019