Yarl Rider

Yarl Rider

Share

This Page Make enjoy full

30/08/2026

நேபாளம் வெள்ளப்பெருக்கு

30/08/2026

ஓணம் கொண்டாட்டம்

24/08/2026

அலங்காரா நல்லூரா @

23/08/2026

வெள்ளவத்தை மயூரணி அம்மன் ஆலய தேர்பவனி 🙏🙏🙏🙏🙏

21/08/2026

ஓம் முருகா

21/08/2026

Cheese pasta 😋

16/08/2026

இந்த விளையாட்டு நல்லா இருக்கே

16/08/2026

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடை விதித்ததால்தான் தமிழின அழிப்பு நடைபெற்றது.

இது திரு.விராஜ் மெண்டிஸ் அவர்களின் அசைக்கமுடியாது கூற்று.
விடையத்துக்கு வருகிறேன்,
2009 தமிழ் மக்கள்மீதான தமிழின அழிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளை வல்லரசு நாடுகளின் துணைகொண்டு அழித்ததும் அனைவரும் அறிந்தவை.
யேர்மனியில் தமிழீழ விடுதலை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் நடைபெற்றது. நடந்த வழக்குகள் அனைத்திலுமே தமிழீழ செயல்பாட்டாளர்கள் யேர்மன் அரசால் போடப்பட்ட வழக்குக்கு எதிராகா வழக்கு தொடுக்கவும் இல்லை தமிழர் தரப்பு நியாயங்களை சொல்லவதற்கு முயற்சிக்கவும் இல்லை. புலிகளை தீவிரவாதிகள் என்று அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு தண்டப் பணத்தை கட்டி தங்களை வழக்குகளில் இருந்து விடுவித்து கொண்டார்களே தவிர.எமது தார்மீக போராட்டத்தை நியாயப்படுத்தி எமக்கு நீதி கேட்க யாரும் முன்வரவில்லை.சமரசம் மட்டுமே செய்து கொண்டார்கள்.

எனக்கும் அதே சமரசம் செய்வதற்கு அழைப்பு வந்தது.1800 யுரோக்களை செலுத்தி புலிகள் தீவிரவாதிகள் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தது குற்றம், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஒப்புதல் அளிக்கவேண்டும்.
என்னோடு சம காலத்தில் அழைப்பு வந்த அனைவருமே சமரசம் செய்து கொண்டார்கள்.
நான் அதற்கு தயாராக இல்லை எமது விடுதலை போராட்டத்தை எமது இயக்கத்தை அவர்கள் சொல்வது போன்று ஏற்றுக் கொள்ள மனம் மறுதத்து. வழக்குரைஞர் பலமுறை சொல்லியும் நான் ஒப்புக் கொள்ள மறுத்ததால், குறித்த திகதிக்குள் ஒப்பமிடாவிட்டால் தாங்கள் எனக்காக செயல்பட முடியாது என்று இறுதியா கூறினார்கள்.
அந்த இறுதி நேரத்தில் திரு.விராஜ் மெண்டிஸ் அவர்களை சந்திக்கிறேன் விடயம் அவருக்கு சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் இருந்து அவரது நிலைப்பாடும், புலிகள் தீவிரவாதிகள் அல்ல அவர்களது போராட்டம் நியாயமானது அவர்களை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தமைதான் தமிழினம் அழிந்தற்கு முழுமுதற் காரணமாக அமைந்தது என்பதில் உறுதியாக இருந்தார்.அன்றே எதிராக வழக்கை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அவரது குரல் யாரிடமும் எடுபடவில்லை.
அவரது நிலைப்பாடும் எனது நிலைப்படும் ஒன்றித்தது. எனவே எனக்கு எது நடந்தாலும் வழக்கை எதிர்கொள்ள நானும், வழக்கை திட்டமிட்டு நடாத்துவதற்கு திரு விராஜ் மெண்டிஸ் அவர்களும் தயாரானர்.
எங்களால் எதிர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.பல அழுத்தங்கள் மிரட்டல்கள் எல்லாத்தையும் தாண்டி நானும் திரு விராஜ் மெண்டிஸ் அவர்களும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். இந்த வழக்கை நடாத்துவதற்கு திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் உழைப்பும் தியாகமும் அளப்பரியது.
நாங்கள் எதிர் வழக்கை தொடுத்தமையால், நீதிமன்றம் ஏற்கனவே முடிவெடுக்க முடியாமல் நிலுவையில் இருந்த மூவரின் வழக்கையும் என்னுடைய வழக்குடன் இணைத்து ஒன்றாக்கியது.
அதில் இருவர் இன்றும் TCC அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றையவர் திரு.ஆனந்தராசா அவர்கள்.
திரு ஆந்தராசா அவர்கள் வழக்கு நடாத்துவதற்கு எங்களுடன் இணைந்து கொண்டார், ஏனைய TCC அமைப்பின் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இந்த வழக்கில் திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் உழைப்பும் தியாகமும் அளப்பரியது. இதற்காக உரிமை கூரக் கூடிய ஒருவர் திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் மட்டுமே.பலர் ஆதரவாக இருந்தார்கள் நிதியை வழங்கி உள்ளார்கள் நேரத்தை செலவு செய்துள்ளார்கள் ஆனாலும் வழக்கை நடாத்தி சாதித்தவர் திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள்தான்.
வழக்கு எமக்கு சாதகமாக அமையவில்லை, ஆனாலும் நாங்கள் இறுதிவரை அவர்கள் எங்கள்மீது சுமத்திய குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எமது விடுதலை போராட்டமும் நீதியானது ,புலிகளும் தீவிரவாதிகள் அல்ல என்ற நிலைப்பட்டுடன் ஆதாரங்களையும் வழங்கியிருந்தோம்.
நாங்களே எங்களை தீவிரவாதிகள் என்று ஒப்புக் கொண்டவர்கள் மத்தியில் நாம் இருவரும் அதை ஏற்க மறுத்து தமிழர் தரப்பு நியாயங்ககளை எமக்கு நடந்த அநீதிகளை எம்மீது சுமத்தப்பட் பொய்களை எமது மக்களும் போராளிகளும் கொல்லப்பட காரணமானவர்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி இருந்தோம்.
இன்று இந்த வழக்கு எமக்கு சாதகமான தீர்வு தரவில்லை.ஆனால் என்றோ ஒருநாள் இந்த வழக்கில் எம்மால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள்
நிச்சயம் நன்மை பயக்கும்.
நாங்கள் வெல்லுவோம் என்பதற்காக வழக்கை நடத்தவில்லை. என்றோ ஒருநாள் தமிழ் இனத்துக்கு இது சாதகமாக அமையும் என்பதால் வழக்கை நடத்தினோம். எல்லோரும் குற்றத்தை ஒப்புக் கொண்டால் எம்மை திட்டமிட்டு அழித்தவர்கள் இலகுவாக தங்களை நியாயப்படுத்தி காத்துக் கொள்வார்கள்.

தமிழ் ஈழத்துக்கான போராட்டம் முடியவில்ல!
இன்று திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் எம்முடன் இல்லை.ஆனாலும் அவர் செய்த பணி தமிழினத்துக்கு ஒருநாள் பயன்தரும்.
இந்த வழக்கு Düsseldorf உயர் நீதி மன்றத்தில் 12 தடவை நடைபெற்றது, தொடர்ந்து karlsure உச்ச நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தோம. அங்கும் வழக்கை எடுக்க மறுத்து விட்டனர், தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றுக்கு வழக்கை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் மேற்கொண்டு இருந்தார். அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.
திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் இயற்கை எய்தி 2 வருடங்கள் ஆகிறது.
இந்த வழக்கின் முழுச் செலவையும் மக்கள் தீர்ப்பாய செலவையும் உறவுகளின் பங்களிப்போடு நிவர்த்தி செய்வதே அவரது திட்டம்.
பலர் பங்களிப்பு செய்திருந்தார்கள் இருந்தும் நிதி முழுமையாக கிடைக்கப் பெறவில்லை.
வழக்கின் தீர்ப்பு, நானும் , திரு ஆந்தராசா மற்றும் ஏனையவர்களும் குற்றவாளிகள். எனக்கு 1.5 வருட சிறை ஆனால் 4 வருட நன்னடத்தை பிணையில் விட்டனர்.குற்றம் செய்தால் சிறையில் அடைப்பார்கள்.
நீதிமன்ற செலவாக திரு ஆந்தராசா 1500யூரோ செலுத்த வேண்டும் அதை அவரே செலுத்தியும் உள்ளார்.
நான் karlsure உச்ச நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்தேன் வழக்கு எடுக்கப்படவில்லை ஆனாலும் அதற்கான நீதிமன்ற செலவாக 686.00யூரோ செலுத்தச் சொன்னார்கள்
இந்த நிதி முழுமையா என்னால் செலுத்தப்பட்டது.
4 வருடங்கள் பிணைக்காலம் நிறைவு செய்து வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன் நீதிமன்ற செலவு பணமாக 12028,37 யூரோவை நான் செலுத்த வேண்டும் என்பது தீர்ப்பு.
இந்த நிதியையும் நான்தான் செலுத்தப் போகிறேன்.கூட நின்று கம்பு சுத்தினவர்கள் எவனையும் காணோம்!
இந்த வழக்குகளுக்கு உரிய வழக்குரைஞர்கள் பணம் என்னால் செலுத்தப்படவில்லை.அவர்களுக்கு எவ்வளவு செலுத்தப்பட்டது என்ற தகவலும் என்னிடம் இல்லை.
திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் காலமாகிவிட்டார், அவருக்கு உதவியாக செயல்பட்டவர் என்னுடன் தொடர்பில்லாமல் ஒதுங்கி கொண்டார். வழக்குரைஞர்கள் என்னுடன் தொடர்புக்கு வருகிறார்கள் இல்லை. எனவே 12028,37 யூரோ நிதியை தவணை முறையில் கட்டுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறேன்.
இந்த தண்டப்பணம் 12028,37 யூரோ எனக்கு மட்டும்தான் வந்திருக்கிறது. திரு ஆனந்தரா அவர்களுக்கு இல்லை. ஏனெனில் நான் மட்டும்தான் குற்றத்தை ஏற்காமல் எதிர் வழக்கு தொடுத்தது.
இவற்றை எல்லாம் எதிர்பார்த்துதான் வழக்கு நடாத்துவதற்கு முடிவெடுத்தேன். நாட்டுக்காக மக்களுக்காக மாவீரர்களுக்காக தலைவருக்காக என் கடமையை செய்யவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள்மீது இனம்புரியாத அளப்பறிய நம்பிக்கை, மாவீரர்களின் துணையும் இணைந்து என்னை வழிநடத்தியது. தொடர்ந்தும் நாட்டுக்காக எனது பணியை செய்ய உறுதியோடு இருக்கிறேன்.
திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் பணி அளப்பரியது, வழக்கிற்காக அவர் உழைத்த உழைப்பு தியாகம் தலைவர்மீதும் மாவீரர்கள்மீதும் தமிழ் மக்கள்மீதும் அவர் கொண்ட அன்பும் அளவிட முடியாதது.
எமது உரிமைக்காக நாம் ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான முழு வேலைகளையும் அதற்கான ஆதாரங்களை ஆவணப் படுத்தலையும் செய்து கொண்டு இருக்கும் பொழுதே திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் காலமாகிவிட்டார்.
அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் வழக்காடுவதற்கு உரிய ஆயத்தங்கள் செய்து தொடர்ந்து வழக்காடுவதே எமது திட்டமாக இருந்தது.
இந்த வழக்கின் மூலம் திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் சாதித்தது.தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்தான் என்பதை தமிழீழ விடுதலை செயல்பாட்டாளர்கள் மூலமே நிறுவ முயன்ற உலக கொடுங்கோலர்களுக்கு எங்கள் இருவர் மூலம் அவர்களது திட்டத்தை தகர்த்தமை.தமிழின அழிப்புக்கு மூலகாரணமாக இருந்த ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளையும் குற்றவாளிகளாக தோலுரித்து காட்டியமை,தமிழர்களின் உரிமைப்போர் நீதியானது, தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்று நீதி மன்றத்தில் நிறுவியமை. TCC அமைப்புகளின் உண்மையற்ற செயல்பாடுகளை தோலுரித்து காட்டியமை ஆகும்.
திரு விராஜ் மெண்டிஸ் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே.
நாதன் தம்பி, ஆனந்தராசா வழக்கு மற்றும் மக்கள் தீர்ப்பாயம் நாடு கடத்தப்பட இருந்தவர்களின் விடுதலையில் அவர் உழைத்த உழைப்பை எவரும் பங்குபோட முடியாது. அவர் எம்மை விட்டு பிரிந்து 2 வருடங்கள் ஆகிறது குறைந்த பட்சம் அவர் செய்த வேலைத்திட்டத்தில் ஒன்றுகூட முன்னகர்தப் படவில்லை.
சரியானவர்கள் நான் முழுமையாக நம்பக்கூடியவர்களை நான் அடையாளம் காணும் பட்சத்தில் நாட்டுக்கான எனது பணியும் தொடரும்.
விடயம் என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
TCC நபர்கள் திருமதி மெண்டிஸ் அவர்களை தொடர்பு கொண்டு நாதன் எங்களிடம் கூறுகிறார் அவருக்கு இந்த வழக்கு செய்ய விருப்பம் இல்லை திரு விராஜ் மெண்டிஸ், மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்டவரின் அழுத்தத்தால்தான் வழக்கு போட்டதாகவும் அந்த இன்னொரு நபர் தன்னிடம் கூறி என்னிடம் கேட்க சொன்னாராம்.
இந்த செய்தி வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கான 12028.37 யூரோ தண்டப் பணத்தை கட்டு என்று தீர்ப்பும் வந்தது.
நண்பரிடம் அப்போதுதான் தண்டப் பணம் கட்டச் சொல்லி வந்த விடையத்தையே சொல்கிறேன்.
நான் TCC இன் நபர்களுடன் கதைக்கவில்லை. அவர்களுடன் எனக்கு தொடர்பும் இல்லை காசு வந்த விடயமே திரு ஆனந்தரா அவர்களுக்கு மட்டும்தான் தெரிவித்தேன்.வேறு யாருடனும் நான் கதைக்கவில்லை என்றேன் .
நான் இப்படி சொல்கிறேன் என்று திருமதி மெண்டிஸ் சரியாக கவலைப் படுவதாகவும் திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் உழைப்பு வீணாகிறது என்றும் கோபம் உற்றுள்ளதாகவும் சொன்னவர். நான் என்ன முடிவு எடுத்தாலும் தங்களுடன் கதைத்துவிட்டு எடுக்கட்டாம் என்றார்.
நான் TCC நபர்களுடன் கதைக்கவில்லை, யார் அதை அவரிடம் சொன்னார் என்று எனக்கு சொல்லவும் இல்லை, என்னுடன் திருமதி மெண்டிஸ் அவர்களோ தகவல் பரிமாறிய நபரோ தொடர்பு கொள்ளவும் இல்லை.நான் தண்டப் பணம் 12028,37 யூரோ வந்ததை சொல்லியும் இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் TCC அமைப்பின் நபர்களுடன் கதைக்கவில்லை என்பதையும் அவர்கள் நம்பவில்லை.
விடயத்தை தொடர்புபட்ட என்னுடன் கதைக்காமல் ஆளாளுக்கு நீங்கள் ஒரு முடிவில் இருந்தால் நான் பொறுப்பாக முடியுமா?
திரு விராஜ் மெண்டிஸ் அவர்களுக்கு உதவியாக இருந்த அந்த நபர் எமது தமிழாலயத்திலும் எனது தனிப்பட்ட விடயத்திலும் பல குழப்பங்களை உண்டு பண்ணிவிட்டு ஒதுங்கி கொண்டார்.
தெழிவற்ற உண்மையற்ற இவர்களை நம்பி நான் எப்படி எனது பணியை செய்ய முடியும்?
திரு விராஜ் மெண்டிஸ் அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும்.ஆனால் அதை இவர்களுடன் இணைந்து செய்ய முடியாது.
நான் வழக்கை தொடர்ந்தது திரு விராஜ் மெண்டிஸ் அவர்களின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையிலும் ஒரு தமிழனாக எனக்கு இருந்த கடமையாலுமே.
வேறு யாரும் அழுத்தம் தந்து செய்வதற்கு நான் பொம்மையும் அல்ல, அறிவற்ற சிந்திக்க தெரியாத மூடனும் அல்ல.
ஏதோ ஒரு வகையில் நாட்டுக்கான என் பணி தொடரும்.

நாதன் தம்பி

13/08/2026

DUM biriyani

02/01/2026

ஆரியகுளம் சந்தி திக்குமுக்காட போகுது நாளைக்கு 😁😁

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jaffna
40000