Pratheep Inba

Pratheep Inba

Share

Do good deeds to draw positive energy,negative deeds will never draw positive energy.Share the good word spread the good vibe in universe.

Photos from Pratheep Inba's post 29/08/2026

உலகின் அழகையெல்லாம் தேடித் தேடி ரசிக்கும் ஒருவன் ,ஒரு கிராமத்துக்கு செல்கிறான் , அங்கு ஒரு பெண் ;அவளின் முதல் பார்வையிலேயே இவன் ஜென்மத்தின் சாபத்தை போக்குகிறாள் ; இவர்களின் காதல்தான் "ப்ரேமம் "

07/07/2026

நீ மிகவும் காதலிக்கும் ஒன்றை எப்பாடுபட்டாவது அடைந்துவிடு !!

பின்பு அதன் கரங்களாலே ,மெது மெதுவாக மரணத்தை தழுவி விடு !!

Find what you love and let it kill you ❤️❤️

21/05/2026

நீ ஆத்மாவை மறக்க விரும்பினால் எவரும் தடுக்கப் போவதில்லை.
அது உன்னுடைய சுதந்திரம்.

என்னுடைய வேலை
உன்னை இறைவனிடம் சேர்த்து வைப்பதல்ல
நீ இறைவனோடு இணைந்தேதான் இருக்கிறாய் என்பதை நினைவூட்டுவது அவ்வளவுதான்.

ஒஷோ.

01/05/2026

ஒரு முறையேனும் உண்மையாய் காதலித்தவனை மரணம் ஒன்றும் செய்வதில்லை !!

தினமும் இறக்க துணிந்தவனை மரணம் என்ன செய்யமுடியும் ❤️❤️

Photos from Pratheep Inba's post 06/04/2026

யாழ்ப்பாணத்தில்!!

02/04/2026

எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் கற்றது தமிழும் ஒன்று ; கதாநாயகன் ராமின் உணர்வுகளை எனக்கு கொஞ்சம் புரிவதாலும் இருக்கலாம் ; ராம் தமிழ் படித்தவன் இந்த அவசர உலகத்தின் இரைச்சலோடு வாழத்தெரியாதவன் ;
இந்த உலகமும் அவனை கண்டுகொண்டதில்லை !
பொதுவாக தமிழ் படித்தவனுக்குள் காதல் , காமம் கோபம் ,ரணம் அதிகம் ;
ஒரு தமிழ் கலைஞனின் உண்மை விம்பம்தான் இந்த "கற்றது தமிழ்" ராம்
இவர்களுக்கான அங்கீகாரத்தை இந்த உலகம் அவ்வளவு சீக்கிரம் தந்துவிடாது !

28/03/2026

சமீபத்தில் Tere ishk mein என்ற படத்தை பார்த்தேன். ஆன்மீகத்தின் உச்ச நிலையான முக்தி அடைதலை அடிப்படையான ஒரு கதையை இயக்குனர் தேர்வுசெய்துள்ளார். சிவன் பார்வதிமேல் உள்ள காதலால் தன்னை அழித்துக்கொள்ள அத்தருணத்தில் முக்தி கிடைக்கப்பெறுகிறது. என்பதே இப்படத்தின் கரு. இப்படத்தில் வரும் கண்ணே கண்மணியே பாடலின் வரிகள் ஆன்மீகத்தின் உச்ச அழகை உணர்த்திநிற்கின்றன. “கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்” ஒளி மீது ஒளியாய், ஒளியே நான் காணுகிறேன் “என் உயிர் யேகும் என் திசை நீயே திசைகள் இல்லா பெரு வெளி நீயே புதிர்கள் போடும் இம்மையும் நீயே உண்மை இல்லா உண்மையும் “நீயே !
சமீபத்தில் வந்த பாடல்களில் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது ❤️

20/03/2026

கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் காதல் வேட்கை அதிகமாக இருக்கும் ! அந்த வரிசையில் தாஜ்மஹால் திரைப்படத்தின் "குளிருது குளிருது" பாடலின் வரி காதலின் உச்சம் ;அந்த வரி
பெ: சுற்றி எல்லாம் எரிகிற.. போது
நாம் இன்பம் கொள்வது.. தீது

ஆ: அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்

இந்த வரிகளை அடிக்கடி நினைத்துப்பார்க்கிறேன் ; இன்றைய உலகமும் அப்படி பட்ட ஒரு வாழ்வியலைத்தான் நமக்கு சில நேரங்களில் தந்துவிடுகிறது ; உலகமே அழியும் நேரம் வந்தாலும் காதலிப்பதை மட்டும் நிறுத்தவே கூடாது; உயிர் போகும் தருவாயிலும் காதலித்துக்கொண்டே இறக்கவேண்டும் !❤️❤️

Telephone

Website

Address


Jaffna