KDC - Kalutara Development Committee

KDC - Kalutara Development Committee

Share

Our Vision

Pioneering in humanitarian relief and development work to improve livelihoods and advance

Our Mission

Provide lasting solutions for poverty related issues in our society.We focus on providing financial support for students and low income families and Providing emergency desaster relief in time of need.We work towards assuring that people in our area (country/community) has access to basic needs including clean water, food, shelter, sanitation, education and healthcare.

09/08/2026

🎓 புலமைப்பரிசில் திட்டம் – 2026 🎓

களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (KDC)களுத்துறை

களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (KDC) வருடாந்தம் மேற்கொண்டு வரும் புலமைப்பரிசில் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2026 பெப்ரவரி மாதம் க.பொ.த. (O/L) பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

🌟 தகுதியுடைய மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

📝 விண்ணப்பிக்கும் முறை

இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள எமது முகவர் நிலையங்களில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து, அதே முகவர் நிலையங்களில் 28 ஆகஸ்ட் 2026 ஆம்(28th August 2026) திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

📍 முகவர் நிலையங்கள்

1. Hill City Mart Hill Street

2. Al Falah Communication Cooray Road, Wettumakada Junction

3. Express Communication Kaleel Place

📅 விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி

🔴 28 ஆகஸ்ட் 2026

⚠️ தகுதி நிபந்தனை

களுத்துறை நகர எல்லைக்குள் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

📌 தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய தகவல்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, இறுதித் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (KDC)களுத்துறை

+94 (75) 663 2858

+94 (77) 422 6255

+94 (75) 431 1485

+94 (75) 557 2901( what’s app only )

🎓 ශිෂ්‍යත්ව වැඩසටහන – 2026 🎓

කළුතර සංවර්ධන කමිටුව (KDC)
කළුතර

කළුතර සංවර්ධන කමිටුව (KDC) විසින් වාර්ෂිකව ක්‍රියාත්මක කරනු ලබන 2026 වර්ෂයේ ශිෂ්‍යත්ව වැඩසටහන සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ.

2026 පෙබරවාරි මාසයේදී අ.පො.ස. (සාමාන්‍ය පෙළ) විභාගය අවසන් කළ සිසුන්ට මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන සඳහා අයදුම් කළ හැකිය.

🌟 සුදුසුකම් සපුරන සිසුන් සඳහා මෙය වටිනා අවස්ථාවකි.

📝 අයදුම් කරන ආකාරය

මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන සඳහා අයදුම් කිරීමට කැමති සිසුන්ට පහත සඳහන් අයදුම්පත් නිකුත් කරන මධ්‍යස්ථාන වෙතින් අයදුම්පත ලබාගත හැකිය.

අයදුම්පත නිවැරදිව සම්පූර්ණ කර, එම අයදුම්පත ලබාගත් එම මධ්‍යස්ථානයටම 2026 අගෝස්තු 28 දිනට පෙර භාරදිය යුතුය.

📍 අයදුම්පත් ලබාගත හැකි මධ්‍යස්ථාන

1. Hill City Mart – Hill Street
2. Al Falah Communication – Cooray Road, Wettumakada Junction
3. Express Communication – Kaleel Place

📅 අයදුම්පත් භාරදීමේ අවසන් දිනය

🔴 2026 අගෝස්තු 28

⚠️ සුදුසුකම්

කළුතර නගර සීමාව තුළ පදිංචි සිසුන්ට පමණක් මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන සඳහා අයදුම් කිරීමට සුදුසුකම් ඇත.

📌 සුදුසුකම් සපුරන සිසුන් අයදුම්පත ලබාගෙන, අවශ්‍ය සියලු තොරතුරු නිවැරදිව සම්පූර්ණ කර, අවසන් දිනයට පෙර භාරදෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු.

කළුතර සංවර්ධන කමිටුව (KDC)
කළුතර

+94 (75) 663 2858

+94 (77) 422 6255

+94 (75) 431 1485

+94 (75) 557 2901( what’s app only )

🎓 SCHOLARSHIP PROGRAMME – 2026 🎓

Kalutara Development Committee (KDC)
Kalutara

Applications are now invited for the 2026 Scholarship Programme conducted annually by the Kalutara Development Committee (KDC).

Students who completed the G.C.E. Ordinary Level (O/L) Examination in February 2026 are eligible to apply for this scholarship programme.

🌟 This is a valuable opportunity for eligible students.

📝 How to Apply

Students who wish to apply for this scholarship programme may obtain the application form from any of the following authorized collection centres.

Applicants are required to complete the application form correctly and submit it to the same centre from which the form was obtained, on or before 28 August 2026.

📍 Application Centres

1. Hill City Mart – Hill Street
2. Al Falah Communication – Cooray Road, Wettumakada Junction
3. Express Communication – Kaleel Place

📅 Application Deadline

🔴 28 August 2026

⚠️ Eligibility Requirement

Only students residing within the Kalutara Municipal limits are eligible to apply for this scholarship programme.

📌 Eligible students are kindly requested to obtain the application form, complete all required information accurately, and submit it before the closing date.

Kalutara Development Committee (KDC)
Kalutara

+94 (75) 663 2858

+94 (77) 422 6255

+94 (75) 431 1485

+94 (75) 557 2901( what’s app only )

02/06/2026

வாமிக் ஹாஜியார் எனும் சமூகத்தின் ஒளிவிளக்கு அணைந்தது; கண்ணீரோடு நாம்…

அன்பால் வாழ்ந்த மனிதர்… 🤍

மண்ணை விட்டு சென்றாலும்
மனங்களில் வாழும் சிலர் இருக்கிறார்கள்…
அவர்களின் புன்னகை,
அன்பான வார்த்தைகள்,
அமைதியான நடைமுறை —
இவை அனைத்தும் இன்று நினைவுகளாகி விட்டன.

எத்தனை பேரின் துயரத்தை தாங்கிய இதயம்,
இன்று அமைதியாக நித்திரை கொள்கிறது…
ஆனால் அவர் செய்த நன்மைகள்
இன்னும் பலரின் துஆவில் உயிருடன் இருக்கின்றன.

சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு,
பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் நீங்கள்…
உங்களின் சேவைகளும்,
மனிதநேயமும்,
அன்பும் —
என்றும் மறக்க முடியாதவை.

இந்த உலக வாழ்க்கை ஒரு பயணம் மட்டுமே என்பதை
உங்கள் பிரிவு மீண்டும் உணர்த்துகிறது…
நம்மை விட்டுப் பிரிந்தாலும்,
உங்களுடைய நினைவுகள்
ஒருபோதும் மறையாது.

யா அல்லாஹ்…
அவருடைய கப்ரை ஜன்னத் தோட்டமாக மாற்றி,
எல்லா தவறுகளையும் மன்னித்து,
ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக… 🤲🏻

அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின் இதயங்களுக்கு
பொறுமையையும், நிம்மதியையும் அருள்வாயாக…

ஆமீன் 🕊️🤍

ஆழ்ந்த இரங்கல்கள்
KDC – Kalutara Development Committee

16/05/2026

#கூட்டுக்குர்பான்_செயற்திட்டம் -2026 #களுத்துறை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரைப் பின்பற்றியோர், பின்பற்றுவோர் அனைவர் மீதும் மறுமை நாள் வரை நிலவட்டுமாக.

முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் பிறை பத்தில் பெருநாள் தினத்தன்று நிறைவேற்றப்படும் மிகவும் முக்கியமான, இறைவனின் விருப்பத்திற்குரிய வணக்கமாகிய உழ்ஹிய்யாவினை நிறைவேற்றுவதற்கு எமக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் !

*கூட்டுக்குர்பான்_செயற்திட்டம்-2026*

*ஒருவர் தனக்காக அல்லது தனது குடும்பத்திற்காக தனியாகவோ அல்லது ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டாகவோ உழ்கியா (குர்பான்) வணக்கத்தினை நிறைவேற்ற முடியும்.*

*உங்களுக்காக அல்லது உங்களது குடும்பத்திற்காக (தாய், தந்தை, மனைவி....) குர்பான் கொடுக்க முடியும்.*

ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி); ஆதாரம்: அபூதாவூத் (2425)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.” (முஸ்லிம் 2537)

ஆகவே ஒரு மாட்டை முழுமையாக குர்பான் கொடுக்க வசதியற்றவர்கள் எமது கூட்டுக் குர்பான் செயற்திட்டத்தில் பங்கு கொண்டு உங்களது குர்பான் வணக்கத்தினை மேற்கொள்ள முடியும்.

*குர்பான் வணக்கத்தின் முக்கியத்துவம்*

*உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)

*ஈதுல் அழ்ஹாவுடைய நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும். நிச்சயமாக குர்பானி அதன் முடிகள், கொம்புகள், குளம்புகளுடன் கியாமத் நாளில் குர்பானி கொடுத்தவனைத் தேடி வருகிறது. அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னர் அல்லாஹ்வை அடைந்து விடுகிறது.“ [இப்னு மாஜா. 3126]

*குர்பானி கொடுக்கப்படுகின்ற பிராணிகளின் ஒவ்வொருரோமத்திற்கு(ப் பகரமாக) ஒரு நன்மையை அல்லாஹ் வழங்குகிறான். ( திர்மிதி 1493]

நன்மைகளை இலகுவாக பெற ரமலான் மாதம் நமக்கு உதவியாக இருந்த‌து போல, இந்த குர்பானியின் அமல் மூலம் இலகுவாக நன்மை பெற மற்றொரு அழகிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்புள்ளவர்களே! அதனை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ளவும்!!!

*எமது நிபந்தனைகள்,*

*1).ஏழு பேர் கொண்ட ஒரு முழு மாட்டுக்கு ஒருவருக்கான பங்கு ரூபா 45,000/-*

2). *உங்களது பங்கிற்கு 05 பொதிகள் உங்களுக்கு வழங்கப்படும்.*

03).*பதிவு செய்யப்பட்ட பங்குகளின் பணங்களை 20/05/2026ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.*

5).*உமது உழ்கியா தொடர்பான அனைத்து அப்டேட்ஸ் களும் எமது வாட்ஸ் அப் குழுமம் மூலம் உங்களுக்கு அப்டேட்ஸ் செய்யப்படும்.*

*6).உங்களது பங்குகளை கீழுள்ள எமது உரிப்பினர்களுக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் அழைப்பினை மேற்க் கொண்டு குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.*

*தொடர்புகளுக்கு*

1).+94 77 249 1456 (Al Haj Hassan Siddeek)
2).+94 77 212 4243 (Al Haj Lafir )
3).+94 75 024 4634 (Mr.Mufthi)
4).+94 75 663 2858 (Mr.Innam)

*குறிப்பு*- 20/05/2026 ஆம் திகதி அல்லது அதற்கு முன் உமது பங்குகளை பதிவு செய்து கொள்ளவும்!

இப்படிக்கு
நிர்வாகம்
களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (KDC)

12/03/2026

-2026

Photos from KDC - Kalutara Development Committee's post 10/03/2026

Team KDC with Ash Sheikh Hasan Fareed (Binnoori)

06/03/2026
27/02/2026

02nd of March (Monday soon after Tharaweeh Prayer)
At Muhiyaddeen Jummah Masjid (Theruppalli) Kalutara

Photos from  DMATK - Disaster Medical Assistance Team Kalutara's post 07/12/2025

Telephone

Address


Kalutara
12000

Alerts

Be the first to know and let us send you an email when KDC - Kalutara Development Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Kalutara.