Color Life

Color Life

Share

சமூக பொறுப்புள்ள சமுதாயத்தை நோக்கி...

22/08/2024

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே...

இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

Copied
*All Credits to Original Content Owner

10/08/2024

இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

All Credits to Original Content Owner

02/07/2024

நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான் உணவை மதியுங்கள்.

உணவை வீணாக்காதீர்கள்... 🙏🏻

Copied
All Credits to Original Content Owner

10/12/2023

என்னால முடியாதுன்னு நினைச்சா அது முடியாது....

O/L Results சொல்ல வந்த மாணவரின் அருமையான பேச்சு

*Credits : to Content owner

22/07/2023

வாங்கிய கடனையோ பொருளையோ திருப்பி செலுத்த முடியாத இயலுமை இருந்தாலும், உரியவருக்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள், அது கூடுதல் முரண்பாட்டைக் குறைக்கும்

யாராவது ஒருவர் உங்களுக்கு உணவருந்த அழைத்தால் விலையுர்ந்த உணவை தெரிவு செய்யாதீர்கள், தெரிவை அவர்களிடமே விட்டுவிடுங்கள்

எப்போது குழந்தை, எப்போது திருமணம், எப்போது புதுவீடு கட்டப்போகிறீர்கள் என உங்களுக்கு பயனே இல்லாத கேள்விகளை இன்னொருவரிடம் அநாகரீகமாக கேட்காதீர்கள்

ஒரு நிகழ்விலோ அல்லது வரிசையிலோ உங்கள் பின்னால் வருபவர்களுக்கு எப்போதும் கதவைத் திறந்துவிடுங்கள். அது ஒரு பையனா அல்லது பெண்ணா, மூத்தவரா அல்லது இளையவரா என்பது முக்கியமில்லை. பொது இடத்தில் ஒருவரை நன்றாக நடத்துவதன் மூலம் நீங்கள் சிறியவர்களாக வளர மாட்டீர்கள்;

ஒரு முறை உங்கள் நண்பன் உங்களுக்காக பணம் செலுத்தினால் அடுத்த முறை அவர்களுக்காக நீங்கள் செலவிட தயாராக இருங்கள்

அறிவு, நிறம்,வசதி, எடை,உடல் குறைபாடு இவற்றையெல்லாம் கொண்டு நீங்கள் சொல்வது நகைச்சுவை அல்ல அது மற்றவரை உங்கள் முன் தாழ்த்திப்பேசுவது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

சிறியதேனும் எப்போதும் நன்றி சொல்வதற்ற்கு மறந்துவிடாதீர்கள்

பொதுவில் வாழ்த்தப்பழகுங்கள், குறைகளை தனியாகசுட்டிக்காட்டுங்கள்

இந்தப் புகைப்படத்தைப் பார் என ஒருவர் உங்களிடம் அவருடைய தொலைபேசியை தந்தால் அந்த புகைப்படத்தை மட்டுமே பாருங்கள் அடுத்த புகைபடத்தை நகர்த்தாதீர்கள்

எனக்கு இன்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என உங்களிடம் யாராவது சொன்னால் “ஏன், எதற்கு என அவர்களின் நோய்கள் குறித்து அலசி ஆராயாதீர்கள்? கேட்காதீர்கள்! மாற்றாக எல்லாம் சரியாகும், கவனமாக சென்று வாருங்கள் எனக் கூறுங்கள்,

வேலை செய்யுமிடத்தில் எல்லோரிடமும் சகஜமாக பழகுங்கள்.

உங்களிடம் ஒருவர் நேராக பேசும் பொழுது கையடக்கத்தொலைபேசியை பார்த்து பதில் சொல்லாதீர்கள்

எதைப் பின்பற்றுகிறீர்களோ அதுவே உங்கள் முன் பிரதிபலிக்கும்

படித்ததில் கவர்ந்தது.....

03/07/2023

துணிந்து செல்லுங்கள்...

24/06/2023
30/03/2023

சவுதி அரேபிய மார்க்க அறிஞர் நடத்திய நேரடி ஒளிபரப்பின் போது சோமாலியா சிறுவன் ஒருவன் கேட்டட கேள்வி

"நான் சஹரிலும் உணவு உண்ணவில்லை இப்தாரிலும் உணவு உண்ணவில்லை எனது நோன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா" 😔

25/12/2022

ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,

10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!

இன்னொருவன்

30 வயதில் திருமணம் செய்கிறான்.

1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!

ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,

5 வருடங்களுக்குப்

பின்பே தொழில் கிடைக்கிறது...!

இன்னொருவன்

27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!

ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...!

இன்னொருவர்

50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.

90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!

நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன் முன்பே கணித்து வைத்தவை.

எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!

அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,

உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்

கொண்டிருப்பான்.

உனக்கு விதிக்கப்பட்டது வேறு..

அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..

ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,

உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!

நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!

அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை செய்து கொண்டிருக்கின்றாய்! அவ்வளவே...!

ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்...!

Copied

25/12/2022

#நீங்களும்_ஓட்டலாம் - #விமானம்!
(புத்தகம் படித்து)

ஒரு நாள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன், விமான ஓட்டி அறையை சுத்தம் செய்யும் போது, "விமானம் ஓட்டுவது எப்படி - முதல் தொகுதி" என்ற புத்தகத்தை கண்டான்.

அவன் அந்த புத்தகத்தை பிரித்தான்.
முதல் பக்கத்தில், "இஞ்சினை ஸ்டார்ட் செய்ய சிகப்பு கலர் பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவன் விமானியின் இருக்கையில் அமர்ந்து சிகப்பு கலர் பட்டனை அழுத்தினான். இஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டது !

அவனுக்கு ஒரே குஷியாகி விட்டது. 2வது பக்கத்தை புரட்டினான். "விமானத்தை நகர்த்துவதற்கு நீல நிற பட்டனை அழுத்துக" என எழுதி இருந்தது. அவனும் அப்படியே செய்தான். விமானம் நகர ஆரம்பித்து வேகமாக ஓடத் துவங்கியது.

இப்போது அவனுக்கு பறக்கும் ஆசை வந்து 3வது பக்கத்தைப் பிரித்தான். "விமானம் உயரே பறப்பதற்கு பச்சை கலர் பட்டனை அழுத்தவும்" என்று இருந்தது.

அவனும் பச்சை கலர் பட்டனை அழுத்தினான். விமானம் மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது. அவனும் மிகவும் உற்சாகமாக 20 நிமிடங்கள் வானத்தில் பறந்தான்.

அவன் மிகவும் திருப்தி அடைந்தவ னாக விமானத்தை கீழே இறக்க முடிவு செய்து புத்தகத்தின் 4 வது பக்கத்தை பிரித்தான்.
அவ்வளவுதான், அவனுக்கு மயக்கம் வந்து கை கால்கள் நடுங்கஆரம்பித்து விட்டன.

காரணம், 4வது பக்கத்தில், "விமானத்தை எப்படிக் கீழே இறக்குவது என்பதைக் கற்றுக் கொள்ள இந்த புத்தகத்தின்
2 வது தொகுதியை அருகிலுள்ள புத்தகக்கடை யில் வாங்கி படியுங்கள்!" என்று எழுதி இருந்துதான்!

பலரின் நிலை இதுதான்😶😶😶

04/10/2022

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்....

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்...

அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...

தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...

" உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."
" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவழிக்காதீர்கள்....

Category

Telephone

Website

Address


Trincomalee
31000