TNTJ Riyadh

TNTJ Riyadh

Share

TNTJ ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம். Official page of TNTJ Riyadh Chapter

05/09/2026

சிறுவர்களின் தோழர் நபிகள் நாயகம் (ஸல்).

20/08/2026
15/08/2026

🚨 அவசர இரத்ததானம் – TNTJ ரியாத் மண்டலம்

ரியாத்: சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அலி பின் அலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர் முனியாண்டி சாமி அவர்களுக்கு அவசரமாக 4 யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக, அவரது நண்பர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டல நிர்வாகத்தை இரு தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்குத் தேவையான 4 யூனிட் இரத்தம் பத்தா மற்றும் சுலைமானியா கிளை சகோதரர்கள் மூலம் அவசரமாக நேற்று ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்! 🤲

இது போன்ற மறக்க முடியாத பேருதவிகளை இறைவன் உதவியுடன் தொடர்ந்து சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்றும், இதற்காக உதவிய அனைத்து சகோதரர்களுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் அவர் நிர்வாகிகளிடம் உருக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார்.
சிகிச்சை பெற்று வரும் சகோதரர் முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என்றும் மனிதநேயப் பணியில்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ரியாத் மண்டலம்
15.08.2026

| | | | | | | |

Photos from TNTJ Riyadh's post 14/08/2026

#80வது இந்திய #சுதந்திர #தினத்தை நினைவில் கொண்டு TNTJ #ரியாத் மண்டலம் நடத்திய மாபெரும் #இரத்ததான முகாம்

சவூதி அரேபியா:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாமில், தமிழ் பேசும் சகோதரர்கள், பிற மாநில சகோதரர்கள், பிற நாட்டு சகோதரர்கள் மற்றும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் இணைந்து இரத்த தான முகாமில் பிறருக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இன்று 14/08/2026, வெள்ளிக்கிழமை #ரியாத் மாநகரில் தமிழ்நாடு #தவ்ஹீத் ₹ஜமாத் #ரியாத் மண்டலம் சார்பாக இன்று 80-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாதில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் (KFMC) சிட்டியில் 149வது மெகா #இரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் *67* கொடையாளர்கள் கலந்து கொண்டு, நேரம் பற்றாக்குறை மற்றும் உடல் தேர்வு அடிப்படையில் *52* நபர்கள் வரை தங்கள் இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மருத்துவ அணி, ரியாத் மண்டலம்
14.08.2026

| | | | | | | |

Photos from TNTJ Riyadh's post 06/08/2026

🩸 Riyadh – 149th Donation Campaign 🩸

🩸 #149வது இரத்ததான முகாம் – ரியாத் 🩸

In the Name of Allah…

On the occasion of ’s 80th Day, Tamil Nadu Thowheed Jamaath (TNTJ), Riyadh Zone, is organizing its **149th Blood Donation Campaign** in association with Fahad Medical City (KFMC), Riyadh**.

Let’s be a part of this noble cause…
**“Whoever saves one life, it is as if he has saved all mankind.”** *(Al Qur’an 5:32)*

Donors are encouraged to participate, as **one donation can save up to three lives.**

📅 Date:** In Sha Allah, 14 August 2026 (Friday)
🕘 Time:** 09:00 AM – 03:00 PM
🏥 Venue:** KFMC Blood Bank, Riyadh

📍 https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

📞 Contact:** 050 063 2353 | 054 430 3930 | 050 696 5758

“Let us express our humanity not just through words, but through blood donation.”

All are cordially invited.

—
**Conducted by**
Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) – Riyadh

===========================================

🩸 149வது இரத்ததான முகாம் – TNTJ ரியாத் 🩸

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இந்தியாவின் #80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு**, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( ) ரியாத் மண்டலம் சார்பாக #149வது மாபெரும் #இரத்ததான முகாம்**, கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையில் நடைபெற உள்ளது, இன்ஷா அல்லாஹ்.

தாங்களும், தங்கள் நண்பர்களுடன் கலந்து கொண்டு இந்த நற்செயலில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📅 நாள்: 14-08-2026 | வெள்ளிக்கிழமை
🕘 நேரம்: காலை 09:00 – மாலை 03:00 மணி
🏥 இடம்: KFMC Blood Bank, ரியாத்

📍 https://goo.gl/maps/6xF97NzkWAzELSnj7

📞 தொடர்புக்கு:** 050 063 2353 | 054 430 3930 | 050 696 5758

“ஒரு மனிதனை வாழ வைத்தவர், அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போன்றார்” *(திருக்குர்ஆன் 5:32)*

ஒரு இரத்ததானம் – மூன்று உயிர்களுக்கு வாழ்வு!
மனித நேயத்தை செயலால் வெளிப்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

—
தமிழ்நாடு #தவ்ஹீத் #ஜமாஅத் (TNTJ)
ரியாத் மண்டலம்

Want your organization to be the top-listed Government Service in Riyadh?
Click here to claim your Sponsored Listing.

Address


Riyadh